வாஸ்து: வீடுகளில் கழுதை படம் மாட்டலாமா ? கூடாதா?
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீடுகளில் வாஸ்து குறைபாடுகளை போக்குவதற்கு நாம் நிறைய விஷயங்களை மேற்கொள்வோம். அதாவது வீடுகளில் வாஸ்து குறைபாடுகளை போக்கக்கூடிய படங்கள் சிலைகளை வாங்கி வைப்பது போன்றவற்றை பின்பற்றுவோம். அந்த வகையில் நம் வீடுகளில் கழுதை படம் வைக்கலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில் கழுதை புகைப்படம் அல்லது சிலை ஒரு கடின உழைப்பை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. இது தனி நபரின் முன்னேற்றத்தையும் அவர்களுடைய உழைப்பிற்கான பலனையும் கொண்டு வந்து சேர்க்க கூடும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் மறுபுறமாக இந்த கழுதையின் புகைப்படத்தையோ அல்லது சிலையையோ நம் வீடுகளில் வைக்கும் பொழுது நாம் வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலாளியாக மட்டுமே இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது. முதலாளி அந்தஸ்துக்கு உயர வேண்டும் என்று தான் நம் எல்லோரும் விருப்பம் கொள்வோம்.
ஆனால் கழுதை புகைப்படத்தையும் சிலையையும் வீடுகளில் வைக்கும் பொழுது முதலாளி என்கின்ற அந்தஸ்தை நாம் அடைய முடியாமல் போகக்கூடிய நிலை வரலாம் என்று சொல்கிறார்கள். அதனால் வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி கழுதை சிலை அல்லது புகைப்படத்தை வைப்பது வீடுகளில் எதிர்மறை ஆற்றலை தான் அதிகரிக்கும் என்று சொல்கிறது.
கழுதையின் படம் மட்டுமல்ல கழுதை போன்று பறவைகளின் படம் அல்லது சிலையை வைப்பது நம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை அவை அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. எங்கு வைக்கலாம்: வாஸ்து ரீதியாக கழுதையின் புகைப்படத்தை நம் வீடுகளுக்கு வெளியே குறிப்பாக வீட்டு வாசலில் மாட்டுவது நல்லது என்று சொல்கிறார்கள்.
நிலக்கதவு போன்ற வெளிப்புறப் பகுதிகளில் வைப்பது வீட்டிற்குள் வருகின்ற எதிர்மறை சக்திகளை அவை தடுப்பதாக நம்பப்படுகிறது. அதோடு கண் திருஷ்டி வராமலும் அவை பார்த்து கொள்கிறது. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் நாம் கழுதையின் புகைப்படம் அல்லது சிலையை வைக்கும் பொழுது தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அவை விரட்டுகிறது.

மேலும், துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படும் சீத்தலா தேவியின் வாகமான கழுதையின் புகைப்படம் அல்லது சிலையை பயன்படுத்துவது, நம் வாழ்க்கையில் கடந்து சில தினங்களாக சந்தித்துக் கொண்டிருக்க கூடிய பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
நீங்கள் கழுதையின் புகைப்படத்தை வீடுகளில் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் வட க்கு கிழக்கு திசையில் வைப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். முடிந்த அளவிற்கு தெற்கு திசையில் இருக்கும் நிலக்கதவில் கழுதை புகைப்படத்தை வைப்பது கூடாது எனவும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |