நீங்கள் மகர ராசியா.. உங்களுடைய பலம் ? பலவீனம் என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் கடின உழைப்பாளியாகவே இருக்கிறார்கள். மேலும், அவர்கள் இரக்க குணம் அதிகம் இருக்கும். சிறந்த பேச்சு திறமை கொண்டிருப்பார்கள். பேச்சாற்றலால் சாதுரியத்தால் எதையும் சாதித்து விடுவார்கள்.
நண்பர்கள், பகைவர்கள், துரோகிகள் என யாராக இருந்தாலும் இவரிடம் வந்து உதவி என்று கேட்டு விட்டால் நிச்சயமாக செய்வார்கள். குடும்பத்தின் மீது அதிக பாசம் இருக்கும். இருந்தாலும் சற்று பிடிவாத குணமும் இருக்கும். எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள்.
பணவரவு:
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பால் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அளவில் எப்பொழுதும் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு விரும்பிய இல்வாழ்க்கையே அமைகிறது.

தொழில்:
மகர ராசியை பொறுத்தவரை செய்யக்கூடிய தொழிலை தெய்வமாக கருதக்கூடியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் அதில் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெறுவார்கள். நண்பர்கள் இவர்களுக்கு அதிகமாக இருப்பார்கள்.
மேலும், இவர்கள் வாழ்க்கையில் முற்பது பகுதியில் அதிக அளவு துன்பம் சந்தித்திருந்தாலும் தங்களுடைய கடின உழைப்பால் பிற்காலங்களில் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொட்டு விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |