கவலைகள் தீர்த்து யோகம் தரும் ஏலக்காய் கிராம்பு மாலை வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் சில சமயங்களில் நம்மை அறியாமல் சில சிக்கல்களை சிக்கிக் கொள்கிறோம். இதற்கு முன் ஜென்ம வினை காரணமா? அல்லது இந்த பிறவியில் தெரியாமல் செய்த பாவமா என்று ஒன்றும் புரியாமல் புலம்பி கொள்வோம்.
அதாவது ஒரு சிலருக்கு திடீரென்று பல கவலைகள், பல பிரச்சனைகள் வந்து விடும். அதிக அளவில் பணம் இருந்தது போல் இருக்கும். ஆனால் எப்படி அது கரைந்தது என்று தெரியாத அளவிற்கு அந்த பணம் காணாமல் போய்விடும்.
அப்படியாக, இவ்வாறான சமயங்களில் மனம் வருந்தாமல் மகாலட்சுமியின் முழு அருளை பெற்று பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விலக பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிபாடு பற்றி பார்ப்போம். இந்த வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் நம் அன்றாட சமையல் அறையில் உபயோகிக்கக்கூடிய முக்கியமான ஒரு சில பொருட்களே ஆகும்.

அதாவது, சமையலறையில் இருக்கக்கூடிய கிராம்பும், ஏலக்காயும் வெறும் நறுமணத்தை கொடுக்கக்கூடிய பொருள் மட்டுமல்லாமல் அவை மகாலட்சுமியின் முழு அருளை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அம்சமாக அவை இருக்கிறது.
ஆதலால் இந்த இரண்டு பொருட்களையும் நாம் சரியாக பயன்படுத்தும் பொழுது மகாலட்சுமியின் முழு அருளை பெற்று நம்முடைய துன்பங்களிலிருந்து நாம் விடுபடலாம்.
ஏலக்காய்–கிராம்பு மாலை வழிபாடு முறை:
ஏலக்காய் கிராம்பு மாலை வழிபாடு செய்ய உகந்த நாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது. இதற்கு முதலில் வீடுகளில் பூஜை அறையை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு ஐந்து முக விளக்கு எடுத்து தனியாக வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு 108 ஏலக்காய் மற்றும் 108 கிராம்பை எடுத்துக்கொண்டு தனித்தனியாக மாலை போல் கோர்க்க வேண்டும். பிறகு ஒரு தட்டில் உங்களால் முடிந்த பழங்களை நெய்வேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு மற்றும் 51 அல்லது 101 ரூபாய் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டை காலை 6 – 7, பகல் 1 – 2, இரவு 8 – 9 இவற்றில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்குமோ அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு கோர்த்து வைத்த ஏலக்காய் மட்டும் கிராம்பு மாலையை குத்து விளக்குக்கு அணிவித்து மகாலட்சுமியின் மந்திரங்களை நாம் பாராயணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை முடிந்தவர்கள் வெள்ளிக்கிழமை செய்யலாம் அல்லது பௌர்ணமி தினங்களில் நீங்கள் செய்யலாம்.
இறுதியில் பூஜைக்கு வைத்த காணிக்கையை கோவில் உண்டியலில் சென்று போட்டு விட வேண்டும். இவ்வாறு மனம் உருகி வழிபாடு செய்தால் நிச்சயம் நம்முடைய வீடுகளில் நல்ல மாற்றம் உண்டாகுவதோடு கடன் தொல்லை படிப்படியாக குறையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |