வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதை உணரும் பூனை
நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து சிலருக்கு பொறாமை படுபவர் அதனை கெடுக்க சிலர் தேர்வு செய்யும் வழி பில்லி, சூனியம்.
ஆனால், பூனைகளுக்கு பில்லி, சூன்யம் போன்ற விடயங்களை காணக் கூடிய திறமையுள்ளது என்று சொல்லப்படுகிறது.
நம் முன்னோர்கள் நமக்கு வரக்கூடிய ஆபத்தையும், நமக்கு சொல்ல நினைக்கும் செய்திகளையும் பூனைகள் மூலம் சொல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், ஒருவர் வசிக்கும் வீட்டில் பூனை அடிக்கடி வருகிறது என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.
ஒரு வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அவர்கள் உணவு பச்சம் இல்லாமல் நல்ல செழிப்பாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.
உணவுக்கு பஞ்சம் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்கள் வீட்டிற்கு பூனை மிச்ச உணவிற்காக வரும்.
அப்படி பஞ்சம் என்பது இல்லாமல் பூனைக்கு உணவு கிடைக்கும் போது அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அந்த இடம் வாழ்வதற்கு ஏற்ற நிம்மதியான, பாதுகாப்பான இடமாகவே கருதப்படுகிறது.
அதேபோல், ஒரு வீட்டில் எந்தவித பில்லி, சூன்யம், ஏவல் போன்ற விஷயங்கள் இல்லை என்றால் அந்த வீட்டிற்கு அடிக்கடி பூனைகள் வரும்.
அப்படி ஒரு வீட்டில் தீயசக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் இருந்தால், அந்த வீட்டிற்கு கண்டிப்பாக பூனைகள் வராது.
எனவே, வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
மேலும், ஒரு வீட்டில் பூனை குட்டிப்போட்டால் அந்த வீட்டில் உள்ள தம்பதியினருக்கு விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







