சைத்ர அமாவாசை - நல்ல நேரம் எப்போது? செய்ய வேண்டிய வழிபாடு என்ன?
2026-ல் சைத்ர அமாவாசை மார்ச் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் வழிபாட்டு முறை என்ன என்பதை எல்லாம் பதிவில் பார்க்கலாம்.

சைத்ர அமாவாசை
இந்து மதத்தில் அமாவாசை தினத்தை ஒரு ஆன்மீக நாளாக வழிபடுகிறார்கள். அதிலும் முக்கியமாக சித்திரை மாதத்தில் வரும் சைத்ர அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணம், புனித நீராடல் மற்றும் தானம் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நீங்கள் பூஜை அல்லது தர்ம செயல்கள் செய்தால் அது உங்களுக்கு முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று தரும். இதனால் தான் இந்த நாளில் எல்லோரும் நல்ல வழிபாட்டுடள் புண்ணியம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
பஞ்சாங்க கணக்குப்படி 2026 ஆம் ஆண்டு அமாவாசை திதி மார்ச் 18 காலை 8:26 மணிக்கு தொடங்குகிறது. இந்த திதி மார்ச் 19 காலை 6:53 மணி வரை இருக்கும். இந்த நாளில் தானம் செய்தால் அது பல ஜென்ம புண்ணியமாக இருக்கிறது.

நல்ல நேரம் எப்போது?
- பிரம்ம முகூர்த்தம்: காலை 5:08 - 5:56 காலை
- சந்தியா நேரம்: காலை 5:32 - 6:44
- அபிஜித் முகூர்த்தம்: மதியம் 12:22 - 1:11
- விஜய முகூர்த்தம்: பிற்பகல் 2:47 - 3:36
இந்த நேரங்களில் பூஜை, தர்ப்பணம் மற்றும் தானம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகி செல்வமும் பெருகும் எனப்படுகின்றது.

என்ன செய்ய வேண்டும்?
இந்த நாளில் முன்னோர்களுக்காக பிண்ட தானம் மற்றும் தர்ப்பணம் செய்யலாம். விஷ்ணு மற்றும் சிவன் வழிபாடு செய்யலாம். இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு தடையாக நிற்கும் விடங்கள் நீங்கும்.
என்ன தானம் செய்யலாம்?
- வெல்லம் தானம்: குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் இனிமையை அதிகரிக்கும்.
- எள்ளு தானம்: எதிர்மறை சக்திகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது.
- ஆடை தானம்: புண்ணியம் சேர்க்கும். பணம் மற்றும் தானியம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இதுபோன்ற தானம் செய்தால் முன்னோர்கள் உங்களை ஆசீவதிப்பார்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் வறுமையும் பஞ்சமும் வராது.