இந்த உலகத்தில் சில மனிதர்கள் சக மனிதர்களுடைய சாதனையை பார்த்து வெளியே சிரித்து சந்தோஷம் கொள்வது போல் காட்டிக்கொண்டாலும், மனதில் அவர்கள் பொறாமை கொள்வதை நாம் பார்க்கலாம்.
அப்படியாக சாணக்கியர் அவர்கள் அரசியலை எவ்வாறு கையாள்வது, வாழ்க்கையை எப்படி வழிநடத்தி செல்வது என்று பல தத்துவங்களை நமக்கு கூறியிருக்கிறார். அந்த வகையில் நம் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களை எவ்வாறு கையாள்வது என்று நமக்கு சில விஷயங்களை கூறுகிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
1. நம்முடன் இருப்பவர்களில் பொறாமை கொள்ளும் மனிதர்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு பலரும் நம்முடைய வெற்றியை கண்டு போலி சிரிப்புகளை சிரித்து விட்டு, வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நாம் தூரமாக சென்ற பிறகு பிறரிடம் நம்மை பற்றி அவதூறு செய்வார்கள்.
ஆதலால் நம் உடன் இருப்பவர்கள் உண்மையாகவே நம்முடைய வெற்றிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அவர்களுடைய நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது என்று நாம் நன்றாக கவனித்து அவர்களை உடன் வைத்துக் கொள்வது அவசியம்.
2. முடிந்தவரை நம்முடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாகவும் வெற்றி பெறுவதற்கு முன்பாகவும் பிறரிடம் கூறுவதை நிறுத்த வேண்டும். இந்த உலகத்தில் ஒரு சிலரின் கெட்ட எண்ண அலைகள் கூட நம் வாழ்க்கையை தாக்கக்கூடும். ஆதலால் நம்பிக்கையானவர்கள் மற்றும் நம் மீது உண்மை அன்பு செலுத்துபவர்களிடம் மட்டுமே திட்டங்களை சொல்வதும் வெற்றியை பகிர்ந்து கொள்வதும் நல்லது.
3. சிலர் பொறாமையின் காரணமாக நம்மிடம் வலுக்கட்டாயமாக சண்டையிடவோ அல்லது நம்மை பற்றி தவறான செய்திகளை பரப்பவும் செய்வார்கள். அவ்வாறான சூழலில் கோபம் கொள்ளாமல் அமைதியாக கையாள வேண்டும். இன்னும் சில நேரங்களில் அவர்கள் செய்யும் அந்த காரியங்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டுமா என்று எண்ணுவதும் அவசியம். முடிந்தவரை அந்த இடத்தை விட்டு விலகுவதே நன்மை தரும்.
4. கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் இருந்து எப்பொழுதும் சற்று விலகி இருப்பதே நல்லது. அவர்களை நம்முடைய சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். என்ன கேட்கிறார்களோ அதற்கான பதிலை மட்டும் கொடுத்துவிட்டு தூரமாக நிற்பதே நல்லது.
5. பொறாமை எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் நம்முடைய வளர்ச்சியை திசை திருப்ப பல காரியங்கள் செய்வார்கள். அதை கண்டுகொள்ளாமல் நம்முடைய வளர்ச்சி பாதையை நோக்கி மட்டும் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







