சாணக்கிய நீதி: தோல்வி நெருங்கும் பொழுது இதை மட்டும் செய்து விடாதீர்கள்
பண்டைய காலத்தில் சாணக்கியர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியலில் வல்லுனராக இருக்க கூடியவர். இவர் எழுதிய சாணக்கிய நீதி என்கின்ற நூலில் வாழ்க்கை அரசியல் மற்றும் மனித நடத்தை பற்றி பல்வேறு கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.
அந்த நூல் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு இன்றளவும் வழிகாட்டியாக அமைகிறது. அந்த வகையில் ஒருவர் வாழ்க்கையில் தோல்வி என்கின்ற ஒரு முடிவு நம்மை நெருங்கும் பொழுது நாம் தவறியும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்பது அவ்வப்போது வரக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் நமக்கு எதிராக இருக்கக்கூடிய போட்டியாளர் அல்லது எதிரி என்பவர் மிகவும் வலிமையானவரா இருக்கிறார் என்றால் அவரை நாம் எப்படி எதிர்கொள்வோம் என்கின்ற குழப்பம் பயம் நம் மனதில் தோன்றும்.
அது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த நிலையில் நாம் தைரியம் மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நமக்கு வலியுறுத்துகிறார். எத்தனை பெரிய சவால்கள் வந்தாலும் மனம் தளராமல் இதுவும் கடந்து செல்ல வேண்டும் என்கின்ற வலிமை கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார்.

அதாவது எவன் ஒருவன் தன்னுடைய நம்பிக்கையை இழக்கின்றானோ அவன் தோல்வி நெருங்கும் முன் அவன் தோல்வியை ஒற்றுக் கொள்வதற்கு சமம் என்று அவர் சொல்கிறார்.
மேலும், எதிரி மிகவும் பலமானவராக இருக்கிறார் என்றால் அவருடைய பலத்திற்கு சமமாக நாம் அவரை எதிர்கொள்ள முயற்சிப்பது தவறு என்றும் அந்த எதிரியை நல்ல அறிவாலும் எதையும் திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
ஆதலால் நமக்கு தோல்வி நெருங்குகிறது என்ற சமயத்தில் மனச் சோர்வு அடையாமல் அதை எதிர்கொள்ள தயாராகி விட்டாலே அந்த தோல்வி நம்மிடம் தோற்றுவிடும் என்று அவர் நமக்கு வழிகாட்டுகிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |