வாழ்வில் வெற்றி பெற சாணக்கியர் கூறிய 5 கூற்று.., என்னென்ன தெரியுமா?
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார்.
பலரும் தங்கள் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், வாழ்வில் வெற்றி பெற சாணக்கியர் கூறிய 5 கருத்துக்களை பார்க்கலாம்.
1. உங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்
மற்றவர்களுக்காக எப்போதும் இருப்பது போதாது. முதலில் நமக்கு நாமே உதவி செய்ய வேண்டும். நம்மை நாம் நேசிக்க வேண்டும். நம்மிடம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். முதலில் நம்மை நாமே மதித்தால், உலகம் உங்களை மதிக்கும்.
2. மற்றவர்களின் பொறுப்புக்களை சுமக்காதீர்கள்
மற்றவர்களின் சுமையை, பொறுப்புகளை உங்கள் தலையில் சுமத்த அனுமதிக்க கூடாது. அவர்களின் பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கினால், அவர்கள் தேவைக்காகப் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
3. உங்கள் நலன்களைப் பற்றி சிந்தியுங்கள்
முதலில் உங்கள் நலனைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு செயலைச் செய்து, அதன் மூலம் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது மிகப் பெரிய தவறு. ஆனால், உங்கள் நலன் கருதி யாராவது பாதிக்கப்பட்டால், அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.
4. மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிப்பதை நிறுத்துங்கள்
முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். எனவே உங்களை மகிழ்விக்கும் செயலைச் செய்யுங்கள்.
5. உங்கள் உரிமைகளுக்காகப் பேசுங்கள்
உங்கள் உரிமைகளுக்காக நீங்களே போராட வேண்டும். ஒருபோதும் பலவீனமாக உங்களை நினைக்காதீர்கள். ஏனென்றால் தங்களைப் பலவீனமாக நினைத்துத் தங்களுக்காக நிற்க முடியாதவர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







