லக்னத்தில் சந்திரன் இருந்தால் அதிர்ஷ்டமா? தோஷமா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்
ஜாதகத்தில் நம்முடைய ராசி மற்றும் லக்னம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படியாக, லக்னத்தில் ஒருவருக்கு சந்திரன் அமையப்பெற்றால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
லக்னத்தில் சந்திரன் அமைவு பெற்றவர்கள் மிகவும் அழகானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் தாயின் மீது அதிக அன்பும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கிடைக்கும். ஒரு சிறந்த கற்பனைவாதியாக இருப்பார்கள்.
ஆனால், எந்த பாவ கிரகங்களும் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜாதகர் மிகுந்த குழப்பவாதியாக ஏற்பார்கள். அதோடு, இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்களுடைய குடும்பத்தில் மீடியா துறையில் வேலை செய்பவர்கள், உணவு தொடர்பான தொழில் செய்பவர்கள் போலீஸ் ராணுவம் போன்ற அமைப்பில் இருப்பார்கள். இந்த லக்னத்தில் சந்திரன் அமைப்பு கொண்டவர்கள் குடும்பத்தில் அதிக அளவிலான பெண்கள் இருப்பார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல், இவர்களுக்கு நண்பர்களுடைய பட்டியல் எப்பொழுது மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு படிக்கும் காலங்களில் அல்லது இவர்கள் குடும்பத்தில் வீடு கட்டும் காலங்களில் இவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |