ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் இப்படித்தான் இருக்குமாம்

By Sakthi Raj Jul 18, 2025 06:10 AM GMT
Report

 நம்முடைய ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் நட்சத்திரங்களும் எவ்வாறு தனித்துவமான குணநலன்கள் இருக்கிறதோ, அதேப்போல் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுடைய குணங்களும் கணிக்கப்படுகிறது.

அப்படியாக, ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். பொதுவாக, சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை பீடை மாதம் என்று அழைப்பார்கள். அதோடு, ஆடி மாதத்தில் பிறக்கும் ஆண் குழந்தை ஆட்டிப்படைக்கும் என்ற கருத்துக்களும் இருக்கிறது.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் இப்படித்தான் இருக்குமாம் | Characterstics Of Person Born In Aadi Month Tamil

அதாவது ஜோதிடத்தில் சூரியன் என்ற கிரகம் தந்தையை குறிக்கும் கிரகம் ஆகும். அதனால், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குழந்தை பிறப்பது ஆகாது என்று சொல்லுவார்கள். அதனால் பலரும், ஆனி மாதத்தில் சிசோியன் செய்து குழந்தை எடுப்பதை நாம் பார்க்கமுடிகிறது.

அந்த வகையில் ஆடி மாதத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சுட்டியாகவும் இருந்தாலும் அவர்கள் ஏதேனும் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்வார்கள். மேலும், இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நல்லதே நடக்க ஆடி மாதத்தில் வழிபாடு செய்யவேண்டிய தெய்வங்கள்

நல்லதே நடக்க ஆடி மாதத்தில் வழிபாடு செய்யவேண்டிய தெய்வங்கள்

அன்பும், பாசமும் நிறைந்தவராக இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்பொழுதும் பெரிய நட்பு வட்டாரம் இருப்பதை நாம் காணலாம். தங்களை அழகு படுத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதேப்போல், கலை துறையிலும் இவர்களுக்கு அதிக அளவில் ஆர்வம் இருக்கும்.

திருமண விஷயம் பொறுத்த வரையில் இவர்கள் தங்களின் பெற்றோர்களின் பேச்சை கேட்டு மட்டுமே நடப்பார்கள். இவர்களிடத்தில் நாம் தெய்வ நம்பிக்கையை அதிக அளவில் காணமுடிடியும். இருந்தாலும் அவ்வப்போது இவர்களுக்கு உஷ்ண சம்பந்தமான வியாதிகள் வருவதை பார்க்கமுடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US