லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்

By Sakthi Raj Aug 22, 2026 10:00 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒருவருடைய லக்னம் பொறுத்துதான் ஒருவருடைய வாழ்க்கை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், லக்னத்தில் ஒருவருக்கு கேது இருந்தால் அவர்கள் தனித்துவமான சிந்தனை கொண்டுவராக இருக்கிறார்கள். அதாவது, லக்னத்தில் கேது இருப்பவர்கள் எதையும் ஆழமாக யோசித்து செயல்படக் கூடியவர்கள்.

மற்றவர்கள் எளிதில் கவனிக்காத விஷயங்களையும் இவர்கள் கவனித்து செயல்படுவார்கள். அதே போல், இவர்கள் எப்பொழுதும் தங்களை அதிகமாக பேசி வெளி காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம் | Characterstics Of Person Who Have Kethu In Laknam

2026 செப்டம்பர்: வெற்றி மேல் வெற்றி பெறப்போகும் மகர ராசியினர்.. கட்டாயம் இது நடக்குமாம்

2026 செப்டம்பர்: வெற்றி மேல் வெற்றி பெறப்போகும் மகர ராசியினர்.. கட்டாயம் இது நடக்குமாம்

மனதில் எப்பொழுதும் ஆழமான சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுதும் அதனுடைய நோக்கத்தை இவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு செய்வார்கள். தேவையில்லாத செயல்களுக்காக நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒருவர் வெளிப்படையாக சொல்லாத விஷயங்களையும் இவர்கள் உணரக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். புத்தகங்கள் படித்த அறிவை காட்டிலும் வாழ்க்கை அனுபவத்தின் வழியாக இவர்கள் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் அதிகமாக தலையிடுவதை இவர்கள் விரும்புவதே இல்லை. தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வாழக்கூடியவர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US