நீங்கள் மீன ராசியில் பிறந்த ஆண்களா? உங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

By Sakthi Raj Jun 13, 2026 07:10 AM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளில் 12வது ராசியாக இருக்கக்கூடிய மீன ராசியினர் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக, மீன ராசியில் பிறந்த ஆண்களின் குண நலன்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

மீன ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் அன்பானவர்கள் தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

அதேபோல் இவர்களுக்கு அதிக அளவில் படைப்பாற்றலும் கலைத்துறையில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். மீன ராசியினுடைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது இவர்கள் கலைத்துறை, மருத்துவம், அரசு வேலை, மேடைப்பேச்சு போன்ற துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

உங்கள் வீட்டில் இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வத்தின் முழு அருள் உள்ளதாம்

உங்கள் வீட்டில் இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வத்தின் முழு அருள் உள்ளதாம்

அதேபோல் இவர்கள் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து செயல்படும் போது தான் இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. மீன ராசியில் பிறந்தவர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரும்பாலும், இவர்கள் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதை போல் இவர்கள் வாழ்க்கையில் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மீன ராசியினர் மற்றவர்களுக்காக கடன் வாங்கும் பொழுது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வட்டிக்கு கடன் வாங்குவதை இவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இவர்கள் கட்டாயமாக குலதெய்வ வழிபாடுகளை அடிக்கடி செய்ய வேண்டும்.

ஜீவ சமாதிகளுக்கு செல்லுதல் சித்தர்களுடைய வழிபாடுகளை மேற்கொள்ளுதல் இவை இவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். மேலும், மீன ராசியில் பிறந்த ஆண்களுடைய குண நலன்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US