புதன்கிழமையில் பிறந்தவர்களிடம் இருக்கக்கூடிய முக்கியமான கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பதும் மிக முக்கியமான ஒரு விஷயமாகும். இந்த எண் கணிதம் கொண்டும் நாம் ஒருவருடைய குணாதிசயங்கள், ஒருவருடைய வாழ்க்கை நிலை, ஒருவருடைய வேலை, ஒருவருடைய பொருளாதாரம் என்று அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக புதன் கிழமையில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
புதன்கிழமையில் பிறந்தவர்கள் எப்பொழுதும் புத்திசாலியாக இருப்பதை நாம் பார்க்க முடியும். புதன் பகவான்தான் ஒருவருடைய பேச்சுத்திறமைக்கு காரணியாக விளங்க கூடியவர். அந்த வகையில் புதன்கிழமையில் பிறந்தவர்களும் பேச்சு திறமையில் வல்லவர்களாக இருப்பார்கள்.
அதோடு புதன்கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அறிவாற்றலை வெளிப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதாவது அவர்களுடைய ஞானத் தேடுதலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆர்வம் இருக்கும்.
அதனால் புதன்கிழமைகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக எல்லா இடத்திலும் முன்னிலையில் இருப்பதை நாம் காணலாம். அதை போல் இவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு நட்பு வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் நடுநிலையாக எல்லோரிடமும் பழகக் கூடிய தன்மை இந்த புதன் கிழமையில் பிறந்தவர்களுக்கு இருந்தாலும் இவர்களுக்கு சமயங்களில் தான் என்ற சுயநலம் சற்று அதிகமாகவே இருக்கும். பல நேரங்களில் சுயநலமாக நடந்து கொண்டு சில எதிரிகளையும் சம்பாதிக்ககூடும். சமயங்களில் அவர்களுடைய அவசர செயல்பாட்டினால் சில சிரமங்களுக்கு ஆளாக கூடும்.
இந்த ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டார்கள் என்றால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விடுவார்கள். அதே போல் இவர்களை கொஞ்சம் நேரம் தனியாக விட்டுவிட்டால் தேவையில்லாத விஷயங்களை அதிகம் யோசிக்க தொடங்கி விடுவார்கள்.
இவர்களின் அதிகப்படியான யோசனை இவர்களை பல நேரங்களில் இவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து உடல்ரீதியான பாதிப்புகளையும் கொடுத்து விடுகிறது. ஆதலால் நல்ல அறிவு ஞானம் கொண்டு புதன் கிழமையில் பிறந்தவர்கள் சற்று நிதானமாகவும் சில நேரங்களில் சுயநலமாக இருப்பதையும் தவிர்த்துக் கொண்டால் இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்து விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







