செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவர்களால் கட்டிய முக்கியமான மூன்று சிவாலயங்கள்
கோயில் என்றாலே பிரமிப்புதான்.அதாவது முந்தைய காலங்களில் அவர்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாக நமக்கு அவர்கள் விட்டு சென்று இருப்பது கோயில்கள் தான்.
ஒவ்வொரு கோயில்களை கட்டிய மன்னர்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.அதாவது பல கைநுட்பம் கலை அம்சம் பொருந்தியதாக கோயில்கள் காட்சி கொடுப்பது நம்மை அதிசயத்தில் ஆழத்துகிறது.
அப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட முக்க்கியமான கோயில்கள் பற்றி பார்ப்போம்.
அருள்மிகு வேதாந்தீஸ்வரர் திருக்கோயில்-வல்லம்
வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட குடவரை கோயில்.இக்கோயிலை பல்லவர்கள் மரம்,கல்,சுண்ணாம்பு,உலோகம் தவிர இயற்கையாக அமைந்த மலைகளும் பாறைகளையும் குடைந்து குடவரை கோயிலாக கட்டி இருக்கின்றனர்.
அதாவது அவர்கள் தொண்டை மண்டலத்தில் எங்கு முதிர்ந்த பாறைகள் இருந்ததோ அங்கு எல்லாம் அழகான அருமையான கலைக்கோயில்களை உருவாக்கினார்கள்.
மேலும் இக்கோயிலில் ஶ்ரீ விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பிரதோஷ காலத்தில் முதலில் துவார பாலகர்களுக்கு அபிஷேகம் செய்து பின் ஶ்ரீ சிவபெருமானுக்கும், ஶ்ரீ நந்திகேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்கிறாரகள்.
சூரிய உதயம் செய்யும்போது சூரிய கதிர்கள் அருள்மிகு சிவன் மீது விழுவது சிறப்பு. இங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்து வேண்டினால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர்.
அம்பிகையை தரிசனம் செய்து வேண்டினால் திருமணம் எளிதில் கைகூடும்.
விநாயகரை வேண்டினால் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும்.
முருகரை வேண்டினால் நவக்கிரக தோஷம் நட்சத்திர தோஷம் நீங்கும்.
அமைவிடம்
இந்த குடைவரை சிவன் கோயில் செங்கல்பட்டு அருகே மகாபலிபுரம் போகும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் வல்லம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு செல்ல
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்-காட்டாங்குளத்தூர்
ஒருமுறை திருவண்ணாமலை தலத்தில் அப்பன் அருணாச்சலஈஸ்வரரை தரிசித்து விட்டு திரும்பிய ராகு கேது ஓர் நாள் இரவு இக்கோயிலில் தங்கி இருந்ததாக ஐதீகம்.
அதனால் இக்கோயிலில் ராகு கேது ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த காளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்து இருக்கிறது.
இங்கு இறைவனின் திருப்பெயர் காளத்தீஸ்வரர்,இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.
இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக பல்லவர்களால் கட்ட பட்ட கோயில்.
இங்கு சிறப்பு என்னவென்றால் சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் தோறும் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகில்.
கோயிலுக்கு செல்ல
அருள்மிகு எட்டிஸ்வரர் திருக்கோயில்-பையனூர்
பல்லவ மன்னர்கள் கட்டிச் சிறப்பித்த பல கோயில்களுள் ஒன்றுதான் பையனூர் ஸ்ரீ எட்டீஸ்வரர் ஆலயம்.மேலும் இங்கு சைவம் - வைணவம் பின்பற்றும் இருவரும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ள கிராமம் பையனூர்.
இதை நிரூபிக்கும் வகையில் எட்டீஸ்வரர் சிவாலயமும், அருளாளப் பெருமாள் வைணவ ஆலயமும் ஊரில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் கிடைக்காத எதையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.
அமைவிடம்
திருப்போரூரில் இருந்து தெற்கே 8 கிமீ மாமல்லபுரத்தில் இருந்து வடக்கே 5 கிமீ சென்னையில் இருந்து தெற்கே 53கிமீ ,செங்கல்ப்ட்டு இருந்து கிழக்கே 23கிமீ தூரத்தில் இத்தலம் அமைந்து உள்ளது.
கோயிலுக்கு செல்ல
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |