சிவலிங்கத்தின் அடியில் சமாதி திகைக்க வைக்கும் குறிஞ்சிப்பாடி ஆலய வரலாறு

By Sakthi Raj Apr 24, 2026 10:06 AM GMT
Report

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியுஇல் அமைந்திருக்கிறது மீனாட்சி உடனுறை சொக்கநாதர் ஆலயம். இந்த கோவில் தில்லை நடராஜர் ஆலயம் செல்லும் பாதையில் அமைந்த முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகும். அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான இந்த திருத்தலம் தில்லை நோக்கி செல்லும் பக்தர்களின் ஆன்மீக பயணத்தின் பொழுது தங்கும் இடமாக விளங்கியது.

பழங்காலத்தில் தென்னாட்டு பக்தர்கள் சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபாடு செய்வதற்கு இவ்வழியாக சென்றனர். அப்பொழுது இந்த பகுதியில் கோலசுவாமி என்ற சிவ பக்தர் ஒருவர் கோவில் இல்லாததை உணர்ந்து சிறிய சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.

சிவலிங்கத்தின் அடியில் சமாதி திகைக்க வைக்கும் குறிஞ்சிப்பாடி ஆலய வரலாறு | Chidambaram Meenakshi Chokkanathar Temple History

சாணக்கிய நீதி: நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்களா? இந்த பதிவு உங்களுக்குத்தான்

சாணக்கிய நீதி: நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்களா? இந்த பதிவு உங்களுக்குத்தான்

அதோடு தில்லைக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்து வந்தார். அந்த நபரின் பக்தியில் ஈர்க்கப்பட்ட மக்கள் பின்னர் அங்கு மிகப் பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

காதோடுகோலசுவாமி மறைந்த போது வயதான உருவத்தில் ஒருவர் தோன்றி சிவலிங்கம் அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கு கீழே அவரை அடக்கம் செய்யும்படி கூறி மறைந்ததாக நம்மப்படுகிறது. இதனை மக்கள் சிவபெருமானின் அருள் வாக்காக கருதி இந்த இடத்தில் கருவறை அமைத்து ஆலயமாக உருவாக்கினர்.

இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடைபெற்றாலும் கருவறை அதன் பழமை மாறாத தன்மையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் இரு நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலில் சிவன் பார்வதி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களின் சுதைச் சிலைகள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன.

அதோடு மகா மண்டபத்தில் கொடிமரம் பலிபீடம் காணப்படுவதுடன் கருவறையை நோக்கி இரண்டு நந்திகள் இருப்பதும் இந்த திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். கருவறையில் மகேஸ்வரன் பாணலிங்க வடிவில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

சிவலிங்கத்தின் அடியில் சமாதி திகைக்க வைக்கும் குறிஞ்சிப்பாடி ஆலய வரலாறு | Chidambaram Meenakshi Chokkanathar Temple History

2026: ஏப்ரல் மாதம் கடைசி 4 நாட்கள் நடக்கப்போகும் அதிசியம்.. யோகம் பெரும் ராசிகள்

2026: ஏப்ரல் மாதம் கடைசி 4 நாட்கள் நடக்கப்போகும் அதிசியம்.. யோகம் பெரும் ராசிகள்

கோஷ்டங்களில் நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். 63 நாயன்மார்களுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்து இருக்கிறது. மீனாட்சியம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்தால் தீராத நோய்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் திருமண தடை சந்திப்பவர்கள் வந்து வழிபாடு செய்ய நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இங்கு வழங்கப்படுகின்ற திருநீறு பிரசாதம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US