சாணக்கிய நீதி: நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்களா? இந்த பதிவு உங்களுக்குத்தான்
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எல்லோரிடத்திலும் சமமாக பழகுவார்கள், மனதில் நல்ல எண்ணமும் சிந்தனையும் அன்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இவ்வாறு ஒருவர் யார் என்ன செய்தாலும் அவர்களை உடனடியாக மன்னிப்பதும் அவரிடத்தில் அன்பாக இருப்பதும் தவறு என்று சொல்கிறார் சாணக்கியர்.
சாணக்கியர் என்பவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான நன்மை தீமையை மிகச் சரியாக ஆராய்ந்து வழிநடத்தக்கூடியவர். அவர் அறிவுறுத்திய நெறிமுறைகளை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றும் பொழுது நாம் உயர்ந்த நிலையை அடையலாம்.

தொழில் ரீதியாகவும், குடும்பத்திலும், சமுதாயத்திலும் மதிப்பு மிக்க மனிதராக வாழலாம், அதனால் பலரும் சாணக்கியரின் வழியை பின்பற்றுகிறார்கள்.
அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை பற்றி அவர் மிக தெளிவாகவும் அதற்கு உரிய முக்கிய காரணங்களையும் சொல்லுகிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
1. நாம் பல நேரங்களில் வெளிப்படையாக இருக்கக்கூடியது நமக்கு எதிராக திரும்பக்கூடும். யாரிடம் எந்த அளவிற்கு வெளிப்படையாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டுமே நாம் இருக்க வேண்டும். காரணம் பல நேரங்களில் நாம் நல்ல மனிதராக இருப்பதே சிலருக்கு சுமையாக தெரியும்.
அவர்கள் தீய பாதையில் சென்று கொண்டிருப்பார்கள். அந்த நேரங்களில் ஒரு நல்லவர் அவர் முன் நிற்கும் பொழுது அவர்களுக்கு குற்றவுணர்ச்சி கொடுத்து அவர்கள் அடைய வேண்டிய இலக்குகளை அவர்கள் அடைய விடாமல் தடுத்துவிடும். அதனால் திடீர் உறவு முறிவதற்கான வாய்ப்புகள் உண்டு. பிறகு நாம் தான் மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.

2. இங்கு ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை அவன் எந்த இடத்தில் சரியாக பேசுகிறான், எந்த இடத்தில் நிலை தடுமாகிறான் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. ஆதலால் பேச வேண்டிய இடத்தில் சரியான வாதத்தை முன் வைக்காமல் போவதும், பேச கூடாத இடத்தில் தேவை இல்லாத வாதங்களை முன்வைப்பதாலும் நம்முடைய நற்பெயர் கெடுகிறது. ஆதலால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம் என்கிறான்.
3. சில நேரங்களில் நாம் மிகவும் கருணையாக இருக்கும் பொழுது பலரும் நம்மை பயன்படுத்தக்கூடிய நிலைமை உருவாகின்றது. அவர்கள் நம்மை பயன்படுத்துகிறார்கள் என்பதை கூட நாம் அறியாமல் முட்டாள்தனமாக இருந்து விடுகிறோம். காலம் கடந்து எல்லாம் இழந்த பிறகே நமக்கு சில விஷயங்கள் புரிய வரும். ஆதலால், கருணையாக இருப்பதைவிட அறிவோடு இருப்பதே அவசியமானது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |