சக்தி வாய்ந்த சித்திரை அமாவாசை அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்
ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை மிகவும் முக்கியமான நாள் என்றாலும், சித்திரையில் வருகின்ற அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த சித்திரை அமாவாசை என்பது முக்கியமான நாள்.
அன்றைய தினம் பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேற அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் மும்மூர்த்திகளின் அருளைப் பெறலாம். மேலும்,நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட சித்திரை அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
2025ஆம் ஆண்டுக்கான சித்திரை அமாவாசை ஏப்ரல் 27ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் நாம் கடவுளின் முழு அருளை பெற சில மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்வதால் நமக்கு ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும். அப்படியாக, சித்திரை அமாவாசை நாள் அன்று நாம் சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
அமாவாசையில் சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள் :
1."ஓம் பூரிதா பூரி தேஹினோ, மா தப்ரம் பூர்ய பார"
2."ஓம் நமோ பகவதே வாசுதேவாய"
3."ஓம் நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்"
4."ஓம் சர்வபாதா விநிர்முக்தோ, தன-தான்யஹ் சுதன்விதஹ, மனுஷ்யோ மத்ப்ரசாதேன பவிஷ்யதி நசம்ஷயஹ"
5."சர்வ சித்தி மந்திர ஸ்வரூபிணி தன்வந்தர்யை நமஹ"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.