நாளை(27-04-2025) சித்திரை அமாவாசை கட்டாயம் செய்ய வேண்டியவை
சித்திரையில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சித்திரை அமாவாசை வருகிறது. அன்று நம்முடைய துன்பங்கள் தீர இறைவழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
அதிலும் முக்கியமாக பித்ரு தோஷம் விலக அவர்கள் அன்றைய தினம் முன்னோர்களை வழிபாடு செய்து பரிகாரங்கள் செய்வது வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை கொடுக்கும். இந்த பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட செய்யவேண்டிய முக்கியமான 5 பரிகாரங்கள் இருக்கிறது.
அதனை செய்வதால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் விஷ்ணு, சிவன், சனி தேவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். அதோடு நம்முடைய கர்ம வினைகளும் முற்றிலுமாக விலகுகிறது. அப்படியாக, நாளை வைசாக அமாவாசை அன்று செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
1. பொதுவாக இந்து மதத்தில் அரச மரம் ஆன்மீக தொடர்பு கொண்ட மரமாக பார்க்க படுகிறது. அதனால் அமாவாசை நாட்களில், அரச மரத்திற்கு கங்கை நீர், பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.
அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து 'ஓம் பித்ருப்ய: நமஹ' என்று மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் முன்னோர்களின் அருளை பெறுவதோடு அவர்களின் ஆன்மாவும் சாந்தி அடையும்.
2. நாளைய தினம் சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது நமக்கு உண்டான் தோஷத்தை குறைக்கிறது. அதோடு, ஓம் பித்ருப்ய: நமஹ' என்ற மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நம்முடைய வறுமை விலகுவதோடு, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
3. அமாவாசை நாட்களில், தெற்கு திசை நோக்கி உங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். மேலும், குடும்பத்தின் நலன் வேண்டியும் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்க வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
4. நாளை ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்கலாம். தெய்வங்களுடிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யலாம்.
5. பித்ரு தோஷம் இல்லை என்றாலும் அமாவாசை நாட்களில், இறந்த நம் முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு வைத்து வழிபாடு செய்யவேண்டும். அதோடு, அரச மரத்தின் அடியில் அல்லது கிழக்கு திசையில் விளக்கு வைக்கலாம். இதனால் செல்வம், பணம், செழிப்பு அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |