சித்ரா பௌர்ணமி 2025 : சக்தி வாய்ந்த அன்றைய நாளில் செய்ய வேண்டிய வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி மிகவும் விஷேசம் வாய்ந்ததாக இருந்தாலும் சித்திரை மாதம் வருகின்ற சித்ரா பௌர்ணமி இன்னும் கூடுதல் விஷேசமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய வாழ்வு சிறப்பாக அமைய விரதம் இருந்து சித்திரகுப்தரை வழிபாடு செய்தால் நாம் நினைத்த விஷயங்களை அடையலாம் என்பது நம்பிக்கை.
அப்படியாக, இந்த வருடம் சித்திரா பௌர்ணமி எப்பொழுது? நாம் அன்றைய தினம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் தான் சித்ரகுப்தர்.
அவரை சித்ரா பௌர்ணமி அன்று புனித நதிகளில் நீராடி, கோயில்களுக்கு சென்று, விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம்முடைய பாவங்களும், கர்ம வினைகளும் கரையும் என்கிறார்கள். அதோடு, ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் அல்லது தானம் செய்தால் நாம் சித்ரகுப்தரின் முழு அருளையும் பெறலாம்.
சித்ராபௌர்ணமி அன்று நாம் முடிந்த அளவு நல்ல விஷயங்களை பேசி, நன்மையே செய்ய வேண்டும். அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பால் மற்றும் பழம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
விரதம் முடிக்கும் பொழுது உப்பு சேர்க்காத தயிர் சாதம் சாப்பிடலாம் அல்லது உணவு இல்லாமல் கூட விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை உப்பு இல்லாமல் எடுத்து கொள்வது தான் முக்கிய நிபந்தனை என்கிறார்கள்.
மேலும், அன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்யபவர்கள் இந்த மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதால் அவர்கள் இன்னும் சிறப்பான பலனை பெறுகிறார்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
- ஓம் சித்ரகுப்தாய நமஹ
- ஓம் நமோ பகவதே சித்ரகுப்தாய-
சித்ரகுப்தாஷ்டகம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.