வீட்டில் பணம் பெருக லட்சுமி தேவிக்கு பிடித்த இந்த பொருட்களை வாங்கி வையுங்கள்
மனிதனுக்கு இறைவழிபாடு என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இறைவன் அருள் இருந்தால் ஏழையும் பணக்காரர் ஆகலாம். இறைவன் அருட்பார்வை விலகினால் செல்வந்தரும் ஏழையாக மாறலாம். அப்படியாக, செல்வத்திற்கு அதிபதியான மகாலக்ஷ்மியின் அருள் ஒரு மனிதருக்கு கட்டாயம் தேவை.
அப்பொழுது தான் அவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முடியும். அந்த வகையில் வீடுகளில் மகாலக்ஷ்மி தேவியின் அருளை பெற அம்பாளுக்கு பிடித்த குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வைப்பதனால் நம்முடைய வாழ்க்கையில் செல்வம் பெருகும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
ஸ்வஸ்திக் மற்றும் ஸ்ரீ யந்திரம்:
இந்த இரண்டு பொருட்களும் மிகவும் மங்களகரமான பொருட்கள் ஆகும். இதை வீட்டில் வாங்கி வைத்து பூஜை செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகுவதோடு, மகாலக்ஷ்மி தாயாரின் பரிபூர்ண அருள் நமக்கு கிடைக்கிறது.
செம்பு அல்லது வெண்கல பொருட்கள்:
இந்த இரண்டு பொருட்களை நாம் வீடுகளில் வைப்பதால் மகாலக்ஷ்மி தேவியின் மனம் குளிர்கிறது. மேலும், இந்த இரண்டு பொருட்களை வீட்டில் வைப்பதால் வீடுகளில் அமைதியும், செல்வமும் கிடைக்கிறது.
கோமதி சக்கரம்:
கோமதி சக்கரம் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதை நாம் வீடுகளில் வைப்பதால் வெற்றியுடன் மகிழ்ச்சியும் நமக்கு கிடைக்கிறது. அதோடு கோமதி சக்கரத்தை நம் வீட்டின் நுழைவாயிலில் வைக்கலாம்.
கமலா மலர்கள்:
தாமரை மலர்கள் மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதை நாம் வீடுகளில் வைப்பதால் வீட்டில் உண்டான பண நெருக்கடிகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |