12 ராசிகளின் அதிர்ஷ்ட நிறம் என்ன தெரியுமா?

By Sakthi Raj May 08, 2025 11:19 AM GMT
Report

நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் தனித்தனி சிறப்பம்சம் வாய்ந்தவை. அப்படியாக, 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு அதிர்ஷ்ட நிறங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். இவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் இருக்கிறது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் சமநிலையான மனம் கொண்டவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறங்கள் பச்சை மற்றும் மண் நிறம் ஆகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திகூர்மை கொண்டவர்கள். இந்த ராசியின் அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம் ஆகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக திகழ்வார்கள். இவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை, மற்றும் வெளிர் நீல நிறம் ஆகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறங்கள் தங்கம், ஆரஞ்சு மற்றும் அடர் சிவப்பு ஆகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் எதையும் தீர ஆலோசனை செய்யும் பண்பை உடையவர்கள். இவர்களுடைய அதிர்ஷ்ட நிறமாக கடற்படை நீலம் மற்றும் மண் போன்ற நிறம் ஆகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இரக்க குணமும், அதீத கற்பனை திறனும் கொண்டவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கடல் பச்சை, லாவெண்டர், வெளிர் நீலம் ஆகும்.

சனி வக்கர பெயர்ச்சி: கொட்டும் பண மழை எந்த ராசிகளுக்கு

சனி வக்கர பெயர்ச்சி: கொட்டும் பண மழை எந்த ராசிகளுக்கு

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் எளிதாக கணிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு, ஆரஞ்சு ஆகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம், கருநீலம், சாம்பல் ஆகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் படிப்பு மற்றும் தொழிலில் சிறந்து விளங்குபவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு, நீலம், வெளிர் நீலம் ஆகும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் யாரிடமும் எளிதாக பழகக்கூடிய தன்மை கொண்டவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கருநீலம், நீலம், சாம்பல் ஆகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் மனதில் இரக்க குணமும் தெய்வீக சிந்தனையும் உடையவர்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் ஆகும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US