சனி வக்கர பெயர்ச்சி: கொட்டும் பண மழை எந்த ராசிகளுக்கு
ஜோதிடத்தில் நீதி மானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர். மேலும் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அப்படியாக, சனி பகவான் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு மீன ராசியில் நுழைந்தார். அந்த நிலையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இவர் 138 நாட்கள் வக்கர நிலையிலே பயணம் செய்ய உள்ளார். இந்த மாற்றம் ஒரு சில ராசிகளுக்கு மிகவும்சாதகமான நிலையை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கடகம்:
சனியின் வக்கர பெயர்ச்சி கடக ராசிக்கு மிக பெரிய மாற்றமும் முன்னேற்றமும் கொடுக்க உள்ளது. தொழில் ரீதியாக நல்ல மகத்தான நிலையை அடைய போகிறீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். ஒரு சிலருக்கு வாங்கிய கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்குவார்கள்.
கும்பம்:
சனியின் வக்கர பெயர்ச்சி கும்ப ராசிக்கு மனதளவில் மகிழ்ச்சியை கொடுக்க போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் ஒன்று நல்ல முடிவை பெரும். உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் அடையும். திடீர் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீதிமன்ற வழக்குகள் நல்ல முடிவை பெரும்.
மீனம்:
சனியின் வக்கர பெயர்ச்சி மீன ராசிக்கு மனதளவில் தன்னம்பிக்கையை கொடுக்க உள்ளது. நீண்ட காலமாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். உங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். மகாலக்ஷ்மியின் முழு அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |