கண் திருஷ்டியால் தொடர்ந்து பாதிப்புகளா? அதிலிருந்து விடுபட எளிய வழிமுறை
கண் திருஷ்டி என்பது சக மனிதர்களால் நம்முடைய வளர்ச்சி பொறுக்காமல் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும் ஒரு எதிர்மறை சக்தி ஆகும். அப்படியாக, பலரும் இந்த கண்திருஷ்டியால் அவதிப்படுவதுண்டு. எவ்வளவு முயற்சிகள் செய்தும் அதிலிருந்து அவர்களால் விடுபட முடியாத நிலையை நாம் பார்க்கலாம்.
அப்படியாக, கண் திருஷ்டி விலக ஒரு எளிய வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம். இதற்கு ஒரு பழுதில்லாத தேங்காய் வேண்டும்.
அவ்வாறு பழுதில்லாத தேங்காய் ஒன்றை வாங்கி அதனை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தலையை இடம் பலமாக 11 முறை தேங்காயை சுற்றி அதனை வீட்டு வாசலில் வெளிப்பகுதியில் சிதறு தேங்காயை உடைத்து விட வேண்டும்.

அந்த தேங்காய் எப்படி சுக்கு நூறாக உஉடைகிறதோ அதை போல் உங்களுடைய கண் திருஷ்டிகளும் உடைந்து நீங்கிவிடும். அதன் பிறகு, உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை நீங்கள் காணலாம். தடைப்பட்டு இருந்த காரியங்கள் விலகும்.
இந்த எளிய பரிகாரத்தை மாதத்தில் இரண்டு முறை அமாவாசை மற்றும் பௌர்ணமி நேரத்தில் கடைப்பிடிப்பது இன்னும் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
கண் திருஷ்டி என்பது ஒரு சிறிய காலமே நீட்டிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும் பாதிப்பு பெரிய அளவில் சமயங்களில் கொடுத்து விடுகிறது. அதற்கு அஞ்சாமல் நாம் உரிய பரிகாரங்களை செய்தால் நிச்சயம் நல்ல நிவாரணம் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |