காரியத்தடைகளை நீக்க உதவும் தேங்காய் பரிகாரம்
ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கையில் சுப காரியங்களிலும், வேலையிலும், தொழிலிலும் தடைகள் ஏற்படும்.
இப்படி எந்த காரியத்திற்கு தடைகள் ஏற்படுகிறதோ அந்த காரியங்கள் விரைவில் நடைபெற வேண்டுமென்றால் சில பரிகாரத்தை செய்யலாம்.
இதற்கு தேங்காயை வைத்து மிகவும் எளிமையான முறையில் நாம் பரிகாரம் செய்யலாம்.
தேங்காய் பரிகாரம்
முதலில் நல்ல தேங்காய் ஒன்று மற்றும் வெள்ளை நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள்.
சுப காரியங்களில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அந்த வெள்ளை நூலில் மஞ்சளை தடவி மஞ்சள் நூலாக மாற்றிக் கொள்ளுங்கள்.
வேலை அல்லது தொழிலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டிருந்தால் அந்த வெள்ளை நூலில் குங்குமத்தை தடவி சிவப்பு நூலாக மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் தேங்காயை சுத்தமாக கழுவி பிறகு அதனுடைய குடுப்பியை எடுத்து விட்டு அதற்குள் இருக்கும் மூன்று கண்களிலும் சந்தனத்தை வைக்க வேண்டும்.
பிறகு எந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதார நினைத்துக் நூலை தேங்காயில் சுற்ற வேண்டும்.
சுற்றும் பொழுது நம்முடைய கை முன்னோக்கி செல்லுமாறு தான் இருக்க வேண்டும்.
பிறகு அந்த தேங்காயை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அந்த தேங்காயை பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படத்துக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
உங்களுடைய காரியம் எப்பொழுது நிறைவடைகிறதோ அப்போது தேங்காயில் சுற்றி இருக்கும் கயிற்றை கழட்டி வீட்டில் இருக்கக்கூடிய செடிகளில் போட்டு விட வேண்டும்.
தேங்காயை அருகில் இருக்கும் ஆலயத்தில் உடைத்து விட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |