இயேசு அறையப்பட்ட சிலுவை தமிழகத்தில் தான் உள்ளது.., எங்கு தெரியுமா?
இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி தமிழகத்தின் ஒரு தேவாலயத்தில் உள்ள குகையில் வைத்து பிராத்திக்கப்படுகிறது.
ஊட்டி நகரிலிருந்து 3கிமீ தொலைவில் காந்தல் என்ற பகுதியின் கடைக்கோடி இடத்தில் அமைதியான சூழ்நிலையில் குருசடி என்ற ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் முக்கியத்துவம் ஏசு கல்வாரி மலையில் சுமந்து சென்ற சிலுவையின் ஒரு சிறிய துண்டு இந்த ஆலயத்தில் சிலுவை வடிவில் வைத்து பிராத்திக்கப்படுகிறது.

1939ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி ஏசு சுமந்து சென்ற உண்மையான சிலுவையின் ஒரு பகுதியை வாட்டிகனின் இந்திய தூதர் இந்த திருத்தலத்தை நிறுவிய குரு பால் கிரேஸாக் என்பவரிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆலயத்தில் கட்டப்பட்ட குகைக் கோயிலில் ஒரு சிலுவையினுள் பொருத்திப் புனிதப்படுத்தி வைத்தனர்.
இதனால், இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3ஆம் திகதி குருசடி திருவிழா கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்று வெளியூர் மக்களும் கலந்துகொள்வார்கள்.
இவ்வாலயத்தில் குகைக் கோவில், தண்ணீர் ஊற்றுகள், இயேசு ஜெபிப்பது போன்ற சிலை ஆகியவையும் அமைந்துள்ளது.
மேலும் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |