நாளைய ராசி பலன் (20-04-2026)
மேஷம்:
வியாபாரத்தில் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை பெறும்.
ரிஷபம்:
இன்று எதிலும் நிதானமாக பதட்டம் இல்லாமல் செயல்படுவது அவசியம். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் உருவாகும்.
மிதுனம்:
நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத வேலையை நிதானமாக சரி செய்வீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்:
இன்று நெருக்கமானவர்களே சந்திக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். ஆரோக்கியத்தில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். வேலையில் மாற்றத்தை சந்திப்பீர்கள்.
சிம்மம்:
இன்று மருத்துவ துறையில் பணிபுரிபவர்களுக்கு அமைதியான சூழல் உருவாகும். சொந்த ஊருக்கு சென்று சிலர் இனிமையான நேரம் செலவிடுவீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி:
எதிர்பாராத சில அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அலுவலகத்தில் நேர்மையாக நடந்து கொண்டு அதற்குரிய பாராட்டுகளையும் பெறுவீர்கள். மதியமேல் திடீர் செலவுகள் வரலாம்.
துலாம்:
இன்று ஒரு சிலர் சமுதாயப் பணிகளில் பங்கு கொள்வீர்கள். மூத்த உடன் பிறப்புகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். சேமிப்பு வழியாக முக்கியமான காரியத்தை செய்வீர்கள்.
விருச்சிகம்:
இன்று நண்பர்கள் வட்டம் விரிவடையும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். மனதில் உள்ள கவலைகள் விலகும் நாள்.
தனுசு:
உணவு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். வெற்றி பெறும் நாள்.
மகரம்:
இன்று மனதில் புதுமையான சிந்தனைகள் தோன்றும். வண்டி வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் நல்ல முடிவை பெறும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கும்பம்:
இன்று அரசு பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்ப நபர்களை விட்டுக் கொடுத்து செல்வதாக செய்யும். அலுவலகத்தில் புதிய நண்பர்களை பெறுவீர்கள்.
மீனம்:
இன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். புதிய முயற்சிகளுக்கு முக்கியமான நபரின் ஆலோசனை பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |