நாளைய ராசி பலன் (02-02-2026)
மேஷம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் நீங்கள் இனிமையான நேரம் செலவு செய்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி கொடுக்கும்.
ரிஷபம்:
மனதில் ஆயிரம் சிந்தனைகளும் குழப்பங்களும் தோன்றி மறையும். சிலருக்கு தொழில் செய்யும் இடங்களில் சில பிரச்சனைகள் வரலாம். குடும்பத்துடன் கோயில் பணிகளில் பங்கு கொள்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
இன்று குடும்பத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. மதியம் மேல் இனம் புரியாத குழப்பம் தோன்றி மறையும். வாழ்க்கை துணையிடம் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
கடகம்:
ஒரு சிலருக்கு உடல் நிலையில் ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். சிலருக்கு நினைத்தது போல் வேலைகள் முடியும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்:
வியாபாரம் விரிவு செய்வதை பற்றி யோசிப்பீர்கள். குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். தெரியாத நபரிடம் தொழில் ரீதியாக எந்த விஷயமும் பகிராதீர்கள். சில வழக்கு பிரச்சனைகள் வரலாம்.
கன்னி:
குடும்பத்தில் திடீர் மாற்றமும் குழப்பமும் வரலாம். முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். தாய் உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நாள். மாலை மேல் தெளிவு பிறக்கும்.
துலாம்:
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கக்கூடிய நாள். எதையும் தீர ஆலோசித்து செய்லபடுவீர்கள். உங்களுக்கு மனதில் நம்பிக்கையும் ஆன்மீக உணர்வும் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
குழப்பத்தால் வீண் கோபம் தவிர்க்க வேண்டும். மனதில் இனம் புரியாத கவலையும் எதிர்கால பயமும் வரலாம். தொழிலில் முதலீடு செய்யவேண்டும் என்று புதிய எண்ணங்கள் தோன்றும்.
தனுசு:
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் சற்று கவனம் வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பிறைந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
மகரம்:
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கையின் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். புதிய நட்புகளை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். வேலையில் சில பதட்டம் உண்டாகலாம். குழந்தைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் நாள். வாழ்க்கை துணையுடன் இருந்த மன கசப்புகள் விலகும்.
மீனம்:
உங்களுக்கு புரியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிறைந்திருக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். சொத்து சேர்க்கை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |