நாளைய ராசி பலன் (26-02-2026)

Report

மேஷம்:

இன்று தொழில் ரீதியாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். நன்மையான நாள்.

ரிஷபம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கவனமாக நடந்த கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

மிதுனம்:

இன்று அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும். சொந்தங்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள். சேமிப்பு திட்டம் தொடங்குவீர்கள்.

மகாபாரதம்: போரில் அர்ஜுனனின் தேர் ஏன் பற்றி எரிந்தது தெரியுமா?

மகாபாரதம்: போரில் அர்ஜுனனின் தேர் ஏன் பற்றி எரிந்தது தெரியுமா?

கடகம்:

வேலை பளு அதிகரிக்கும். வழக்கு தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். மதியம் மேல் நற்செய்தி தேடி வரும்.

சிம்மம்:

இன்று உங்கள் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். முகம் தெரியாத நபரிடம் இருந்து சில உதவிகள் கிடைக்கலாம். தாய் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி:

இன்று எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மதியம் மேல் மகிழ்ச்சியான நேரம் தேடி வரும்.

துலாம்:

வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உடல் சோர்வு உண்டாகும். குடும்பத்தில் சில மன கசப்புகள் உருவாகும்.

விருச்சிகம்:

தேவை இல்லாத பேச்சுக்களை குறைப்பது நல்லது. மருத்துவ ரீதியாக முக்கிய ஆலோசனை பெறுவீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். மாலை மேல் பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள்.

2026 ஹோலி பண்டிகை முன் வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் அகற்றி விடுங்கள்

2026 ஹோலி பண்டிகை முன் வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் அகற்றி விடுங்கள்

தனுசு:

பிள்ளைகளால் மனக்கஷ்டம் உருவாகும். தாய் வழி உறவுகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்:

உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களுடன் பொன்னான நேரம் செலவு செய்வீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுக்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். கவனம் வேண்டும்.

கும்பம்:

எதிர்ப்பாராத நபரிடம் இன்று சண்டை ஏற்படலாம். உங்கள் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

மீனம்:

பிள்ளைகள் விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US