இன்றைய ராசி பலன் (30-11-2025)

Report

மேஷம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களை தேடி சில முக்கிய பொறுப்புகள் வரலாம். தந்தையின் மனம் புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மீகம் தேடுதல் மனதில் ஆர்வம் கொள்ளும்.

ரிஷபம்:

உடல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகி செல்லும் நாள். எதிர்பார்த்த இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் நாள். சகோதிரி உறவுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சந்தித்த பிரச்சனை விலகும். மனதில் உள்ள கவலை விலகி நன்மை அடையும் நாள்.

ராகுவின் மாற்றம்: 2026ல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ராகுவின் மாற்றம்: 2026ல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

கடகம்:

எதிர்காலம் பற்றிய அதிக சிந்தனையும் பயமும் வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நபர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நன்மையான நாள்.

சிம்மம்:

உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். மனதில் நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். எதையும் சாதிக்கலாம் என்ற மன தைரியம் பிறக்கும்.

கன்னி:

தாய் வழி உறவால் நன்மை உண்டாகும். வேலையில் உங்கள் வேலைக்கு மதிப்பு உயர்ந்து அங்கீகாரம் கிடைக்கும் நாள். மனதில் உள்ள கவலை விலகி மகிழ்ச்சி உண்டாகும் நாள்.

துலாம்:

உங்களின் பேச்சு திறமையால் காரியம் சாதித்து கொள்வீர்கள். கலை துறையில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

விருச்சிகம்:

மனதில் உள்ள கவலை விலகும். பூர்விக சொத்துக்களில் இருந்த கஷ்டங்கள் விலகும். வெற்றிகள் உங்களை தேடி வரும். பணம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

இலக்கை அடையும் வரை விடாமுயற்சியோடு போராடும் 3 ராசிகள்

இலக்கை அடையும் வரை விடாமுயற்சியோடு போராடும் 3 ராசிகள்

தனுசு:

உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். கடன் தொல்லை விலகும். வாழ்க்கையின் உண்மை நிலை உணர்ந்து கொள்ளும் நாள்.

மகரம்:

நீண்ட நாள் பிரச்சனை வந்த வழி தெரியாமல் போகும். சில காரியங்களை திட்டமிட்டு ஆலோசனை செய்து செய்வது நன்மை செய்யும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கும்பம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுகளில் கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மீனம்:

மனதில் உள்ள குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். உயர் அதிகரிகளால் நன்மை உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செய்வீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த சிக்கல் விலகும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US