இன்றைய ராசி பலன் (13-10-2026 )

Report

மேஷம்:

இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு சில குழப்பங்கள் வரலாம். முக்கியமான நபரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. எதிர்பாராத பணம் கைகளுக்கு வந்து சேரும் வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்:

உங்கள் வீடுகளில் முக்கியமான நபரின் வருகையால் பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். வெளிநாடு செல்லும் பயணம் உங்களுக்கு சாதகமான நிலையைக் கொடுக்கும்.

மிதுனம்:

வீடுகளில் சில மனக்கசப்புகளும் சலனமும் வரலாம். எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொலைதூர பயணங்கள் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கடகம்:

உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகலாம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.

திருமணத்திற்கு இப்படி பொருத்தம் பார்த்தால் பிரிவே வராதாம்

திருமணத்திற்கு இப்படி பொருத்தம் பார்த்தால் பிரிவே வராதாம்

சிம்மம்:

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

கன்னி:

இன்று சவாலான விஷயங்களையும் சாதுரியமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியே உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

துலாம்:

உங்களுடைய குண நலன்களில் சில மாற்றம் உண்டாகலாம். ஆரோக்கிய தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்:

எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்பட வாய்ப்புள்ளது. மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

தனுசு:

நீண்ட நாள் நிலுவையில் இருந்து பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் விலகு. சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

மகரம்:

வியாபாரத்தில் புதிய நபருடைய அறிமுகத்தை பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும்.

கும்பம்:

சில எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிவட்டாரங்களில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாள்.

மீனம்:

பழைய பிரச்சனைகள் மீண்டும் துவங்கலாம். குடும்பத்தில் உங்களுக்கு சில பொறுப்புகள் அதிகரிக்கும். செயல் பாடுகளில் இருந்து வந்த சோர்வு விலகும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US