நாளைய ராசிபலன் (21-10-2026)

Report

மேஷம்:

வரவுகளால் இவர்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகள் நிறைவேற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்:

மனதளவில் புதிய சிந்தனை உருவாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த சங்கடம் விலகும்.

மிதுனம்:

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம். வேலையில் இருந்து சங்கடங்கள் விலகும். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். மதியமேல் சோர்வு உண்டாகலாம்.

கடகம்:

வியாபார செயல்பாடுகளில் சில அலைச்சலை சந்திப்பீர்கள். வேலை பொறுப்புகளில் உடல் அசதி உண்டாகும். எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும்.

2026 அன்னாபிஷேகம்: ஐப்பசி மாதம் பௌர்ணமி எப்பொழுது? அந்த தினத்தை தவறவிடாதீர்கள்

2026 அன்னாபிஷேகம்: ஐப்பசி மாதம் பௌர்ணமி எப்பொழுது? அந்த தினத்தை தவறவிடாதீர்கள்

சிம்மம்:

கடினமான வேலைகளையும் மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

கன்னி:

குடும்ப பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக நடக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம்:

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இருப்பினும் மதியமேல் பொறுமையாக செயல்படுவது அவசியம். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்:

இன்று முதலீடு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போட்டி பொறாமைகளில் இருந்து சற்று தள்ளி நிற்பது அவசியம். மூத்த சகோதரர்களையும் ஆதரவு கிடைக்கும்.

வீடுகளில் முக்கியமான நாட்களில் இந்த பொருட்கள் உடைகிறதா? கவனிக்கத் தவறாதீர்கள்?

வீடுகளில் முக்கியமான நாட்களில் இந்த பொருட்கள் உடைகிறதா? கவனிக்கத் தவறாதீர்கள்?

தனுசு:

வெளிப்படையான குணத்தால் ஒரு முக்கியமான நபர்களுடைய நம்பிக்கையை பெறுவீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதுமையான நாள்.

மகரம்:

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படுவீர்கள். செய்கின்ற முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கும்பம்:

மனதளவில் புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய அறிமுகம் கிடைக்கும். முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டு.

மீனம்:

திடீர் வரவுகளால் உங்களுடைய மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். அரசு வழியே எதிர்பார்ப்பு நிறைவேறும். உணவுத்துறைகளில் நீங்கள் நினைத்த லாபம் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US