தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்
இறை வழிபாடு செய்வதற்கு என்று உகந்த நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு ஆயிரம் மடங்கு பலன் வந்து சேர்கிறது. அப்படியாக, நாம் தினமும் எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.30 மணி முதல் 6:00 மணி வரையிலான நேரத்தில் நாம் வழிபாடு செய்கின்ற பொழுது கட்டாயமாக 100% நாம் நினைத்த வேண்டுதல் நிறைவேறும், வீடுகளில் வற்றாத செல்வம் உண்டாகும்.
2. அதேபோல், காலை நேரமான 6 மணி முதல் 8 மணி வரை நாம் வழிபாடு செய்கின்ற பொழுது அந்த தினம் மிகவும் இனிமையாக அமைகிறது. நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் அந்த நாள் முழுவதும் நாம் நேர்மறை ஆற்றலோடு செயல்படக்கூடிய ஆசீர்வாதத்தை வழங்குகிறது.
3. அதேபோல், நண்பகல் 12 மணிக்கு நாம் வழிபாடு செய்கின்ற பொழுது முன்னோர்களுடைய ஆசிர்வாதத்தை நாம் பெறுகின்றோம். நம் வாழ்க்கையில் உள்ள கர்ம வினைகளும் தோஷங்களும் அடியோடு விலகுகிறது.
4. அதேபோல், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரத்தை சாந்திய காலம் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்கின்ற பொழுது மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழையும் நேரம் என்பதால் மகாலட்சுமி முழு அருளையும் பெறலாம். வறுமை நீங்கி செல்வ வளத்தோடு வாழக்கூடிய ஆசீர்வாதத்தையும் நாம் பெறுகின்றோம்.
அதேபோல் இரவு உறங்குவதற்கு முன்பாக தினமும் நன்றி சொல்லி நாம் இறைவனை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்து உறங்குகின்ற பொழுது கெட்ட கனவுகள் விலகி நிம்மதியான உறக்கத்தை நாம் பெறுகின்றோம்.
இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதால் நமக்கு எந்த பிறவிலும் உடன் நின்று நம்முடைய கஷ்ட காலங்களை தகர்த்து அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய வல்லமை பெற்றவர். இறைவன் அவரை சரணடைந்து எல்லா வளமும் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |