இன்றைய ராசி பலன்கள் (16.06.2024)
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகி இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவீர்கள்.தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.குடும்பத்தில் அமைத்து உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டாலும் விலகி சமாதான நிலைமைக்கு வருவீர்கள்.குடும்பத்திற்கு அக்கறை செலுத்தும் நாள்.
மிதுனம்
நீண்ட பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பீர்கள்.குடும்பத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டிய காலம்.மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதால் மருத்தவ பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கடகம்
இன்று தேவை இல்லாத எதிர்கால சிந்தனை மேலோங்கும்.வியாபாரம் பற்றிய பயம் உண்டாகும்.எதிர்கால சேமிப்பிற்கு ஆலோசனை செய்வீர்கள்.எதையும் பல முறை சிந்தித்து செயல் படவேண்டிய நாள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதம் ஆகலாம்.குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பார்கள்.குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று இருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் இறைவழிபாடு மட்டுமே நன்மை தரும்.குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருக்கும்.கல்வியில் அக்கறையுடன் கவனமுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி அடையமுடியும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.மனம் தெளிவு அடையும்.செய்யும் செயல்களில் தெம்பும் தைரியமும் உண்டாகும் .எதையும் சமாளித்து கொள்ளலாம் என்ற உத்வேகம் பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று உற்ச்சாகமான நாள்.மனதில் இனம் புரியாத சந்தோசம் உண்டாகும்.தொழிலில் இருந்த தடை விலகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும்.உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். நட்புகளிடம் தள்ளி நிற்பது நல்லது.
மகரம்
தெய்வ அருள் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். நன்மையான நாள்.
கும்பம்
எதையும் ஆலோசித்து முடிவு செய்யவேண்டிய நாள்.மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகலாம்.ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து முடிவு செய்வது நன்மை தரும்.படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.குடும்பத்தினர் ஆறுதலாக செயல்படுவார்கள்.குழைந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |