இன்றைய ராசி பலன் (04-07-2026)
மேஷம்:
கலை சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர் வழியில் நல்ல ஒத்துழைப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியாக ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்டமான சில வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்:
தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். கல்வி சார்ந்த துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். முன்னேற்றம் உண்டாகும் நாள்.
மிதுனம்:
மனதில் தேவையில்லாத சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். வேலையில் மறைமுக சூழ்ச்சிகள் சந்திக்கலாம். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். அனுபவம் மேம்படும்.
கடகம்:
வேலையில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். முன்னேற்றம் காணும் நாள்.
சிம்மம்:
கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நண்பர்கள் வழியே மகிழ்ச்சியான சூழ்நிலை கிடைக்கும். தொலைந்த பொருட்களை மீண்டும் வாங்குவீர்கள். சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
கன்னி :
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரம் தொடர்பாக சில நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலையில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். சுபகாரியநிகழ்ச்சிகள் கைகூடிவரும்.
துலாம்:
முயற்சிக்கு ஏற்ற பாராட்டுகளை பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடமிருந்து வந்த வேறுபாடு விலகும்.
விருச்சிகம்:
மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகளை பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு:
தாய் வழி உறவுகளை அனுசரித்து செல்வது அவசியம். புதிய வேலை சார்ந்து முயற்சிகள் கைகூடிவரும். மறைமுகமான தடைகளை உடைப்பீர்கள் அனுசரித்து செல்வது அவசியம்.
மகரம்:
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியே உங்களுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். பேச்சுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்நிலை உண்டாகும்.
கும்பம்:
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். பிரச்சனைகள் தோன்றி மறையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம்:
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடன் பிறப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கலை சார்ந்த விஷயங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |