இன்றைய ராசிபலன் (20-07-2026)
மேஷம்:
இன்று கலகலப்பான பேச்சுகளால் உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை துணை இடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பு குறித்த சிந்தனை உயரும். கல்வியில் தெளிவு உண்டாகக்கூடிய நாள்.
ரிஷபம்:
இன்று ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நோக்கி மனம் பயணம் செல்லும். பொருளாதார உயர்த்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
மாணவர்களுக்கு இன்று மறதி சார்ந்த பிரச்சனைகள் வரலாம். கல்வியில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
கடகம்:
எதிர்பாராத சில விஷயங்கள் வழியாக உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
சிம்மம்:
பழக்கவழக்கங்களில் இன்று முக்கிய மாற்றங்கள் காணப்படும். மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வந்த செல்லும். வழக்கு விஷயங்களில் நீங்கள் பொறுமையை கையாள்வது அவசியம்.
கன்னி:
இன்று வேலையில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
துலாம்:
வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வீர்கள். பழைய விஷயங்களால் மனம் குழப்பம் அடையலாம்.
விருச்சிகம்:
இன்று பணவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்களில் அனுபவம் உயரும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள்.
தனுசு:
இன்று அரசு தொடர்பான வேலைகளில் சில தடைகளை சந்திக்கலாம். உறவினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
மகரம்:
இன்று ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புதிய முயற்சிகள் மற்றும் எதிர்பார்த்த முடிவுகள் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும் நாள்.
கும்பம்:
இன்று உங்கள் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாத நிலை காணப்படலாம். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் வேண்டும். எளிதில் முடியக்கூடிய விஷயங்கள் கூட நீண்ட நாள் தள்ளிப்போகலாம்.
மீனம்:
இன்று போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |