இன்றைய ராசிபலன் (16-06-2026)
மேஷம்:
தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வீடுகளில் உள்ள பிரச்சனைகள் விலகும். நட்பு வட்டாரம் விரிவடையும். நன்மையான நாள். மாலை மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
வழக்கு விஷயங்களில் பலமுறை ஆலோசனை செய்து நீங்கள் செயல்பட வேண்டும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
மிதுனம்:
எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். எதிரிகளால் சந்தித்த தொல்லைகள் விலகி மகிழ்ச்சி அடையும் நாள்.
கடகம்:
இன்று எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சுபமாக அமையும். தொழிலை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
சிம்மம்:
வழக்கு தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கவனமாக பேசுவது அவசியம். சேமிப்பு உயரும்.
கன்னி:
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். தொழில் ரீதியாக நீங்கள் தேவை இல்லாத வாக்குவாதங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். நன்மையான நாள்.
துலாம்:
வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். படிப்பு தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள்.
விருச்சிகம்:
எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். போட்டி பொறாமைகளை விடுத்தால் நன்மை உண்டாகும். தாயிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.
தனுசு:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். நண்பர்களுக்காக நீங்கள் சில முக்கிய காரியம் செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நன்மையான நாள்.
மகரம்:
நட்புகளிடையே சில கசப்புகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
கும்பம்:
யாரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள். வழக்கு மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய திறமை வெளிப்படும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
மீனம்:
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பாக சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களுக்காக சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |