இன்றைய ராசி பலன் (09-03-2026)
மேஷம்:
இன்று நண்பர்கள் மத்தியில் நீங்கள் ஒரு சில மன கசப்புகளை சந்திக்கலாம். திடீரென்று நெருங்கியவர்கள் உங்களுக்கு எதிரியாக மாறக்கூடிய நிலை உருவாகும். மாலையின் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
இன்று உங்களின் எதார்த்தமான குணம் ஒருவரை காயப்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி அடைவார்கள்.
மிதுனம்:
இன்று ஒரு சிலருக்கு ஞாபக மறதி வரலாம். வியாபாரத்தில் முதலீடுகள் செய்வீர்கள். உங்களுக்கு எதிராக சென்றவர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் நாள்.
கடகம்:
நண்பர்கள் வழியே ஒரு நற்செய்தியை கேட்பீர்கள். உங்களின் கற்பனை திறன் வளரும். பிள்ளைகள் வழியே பெருமையும் நற்பெயரும் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
சிம்மம்:
அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை கடைபிடிக்க வேண்டும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உண்டாகும். புதிய மனை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கன்னி:
மனதில் இருக்கக்கூடிய எண்ணத்தை குடும்பத்தினரிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையால் சந்தோஷமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தினரிடம் நீங்கள் இன்று விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உணவு விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு வேண்டும். கலைப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.
தனுசு:
இன்று பொருளாதாரம் தொடர்பாக சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சேமிப்பு தொடர்பாக குடும்பத்தினரிடம் சில ஆலோசனை பெறுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
மகரம்:
எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். கடினமான காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்கள் தடைபட்ட பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கும்பம்:
எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் விலகும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் வழியே ஆதரவு பெறுவீர்கள்.
மீனம்:
இன்று எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |