இன்றைய ராசி பலன்(02-11-2025)
மேஷம்:
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். சிலருக்கு மதியம் மேல் தொழில் ரீதியாக நினைத்த காரியம் கை கூடி வரும்.
ரிஷபம்:
வாழ்க்கையில் சில குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பண பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று சிலருக்கு வேலை பளு அதிகம் இருக்கும். தாய் உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையை பற்றிய முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள்.
கடகம்:
இன்று உங்களின் நட்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முறையில் முடியும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
இன்று சிலருக்கு காலை முதல் சில பதட்டமான நிலை காணப்படும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் கடினமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வீண் உறவு விரிசல் உண்டாகலாம்.
கன்னி:
இன்று நீங்கள் குடும்பத்துடன் சண்டையிடும் நிலை வரலாம். முடிந்த வரை உங்கள் கோபத்தை குறைத்து கொண்டால் இனிய நாள் ஆகும். மதியம் மேல் பிடித்த இடத்திற்கு சென்று மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும், பெற்றோர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். குடும்பத்தில் சில முக்கிய பிரச்சனை நல்ல முடிவை பெரும்.
விருச்சிகம்:
நண்பர்களிடம் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலருக்கு உங்கள் மீது பொறாமை குணம் உண்டாகலாம். வேலையில் முன்னேற்றம் அடையும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனமும் ஆர்வமும் செலுத்த வேண்டும். பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும்.
மகரம்:
உங்களுக்கு பிடித்த வேலை செய்து மகிழ்வீர்கள். மதியம் மேல் உங்கள் மன நிலையில் சற்று குழப்பங்கள் உண்டாகலாம். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள்.
கும்பம்:
இன்று குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்:
குடும்பத்தில் சில மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் நல்ல முடிவை பெரும். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சனைகள் விலகி செல்லும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |