இன்றைய ராசி பலன்(23-04-2025)

Report

மேஷம்:

நேற்று இருந்த பணி சுமை இன்று குறையும். எதையும் தீர்க்கமாக ஆலோசித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

இன்று வேலையில் உங்கள் பணியாளர்கள் ஒத்துழைப்பால் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். இன்று உங்களுக்கு வரும் போட்டிகளை தைரியமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத முக்கிய செய்திகள் வந்து சேரும். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்:

மனதில் பயம் உண்டாகும். நெருங்கியவர்கள் வழியாக ஆதாயம் கிடைக்கும். நினைத்த வேலையை செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுக்கள் பெரும் நாள்.

சிம்மம்:

தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கன்னி:

உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மருத்துவ செலவுகளை சந்திக்கும் நாள். தாய் வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பங்களோடு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

தீராத பிரச்சனையை தீர்க்கும் முருகப்பெருமானின் மிளகாய் தூள் அபிஷேகம்

தீராத பிரச்சனையை தீர்க்கும் முருகப்பெருமானின் மிளகாய் தூள் அபிஷேகம்

துலாம்:

இன்று வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்:

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலையை கையில் எடுத்து வெற்றி காண்பீர்.

தனுசு:

குடும்பத்தில் சில வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெரும்.

மகரம்:

 மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் முயற்சி லாபமாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கும்பம்: 

குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடக்கும். புதியவர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

மீனம்:

இன்று மனதில் எண்ணற்ற சிந்தனைகள் ஓடும். உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்பட்டு வெற்றியில் முடியும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US