இன்றைய ராசி பலன் (26-04-2025)
மேஷம்:
குடும்பத்தில் தேவை இல்லாத செலவுகளை சந்திக்க நேரிடும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவீர்கள். நடக்கவே நடக்காது என்று எண்ணிய காரியம் சிலர் உதவியால் வெற்றி கரமாக நடைபெறும்.
ரிஷபம்:
இன்று திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள். போட்டியாளர்களும் எதிரிகளும் உங்களை விட்டு விலகி செல்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான செல்வாக்கு உயரும். இன்று எந்த ஒரு புதிய முயற்சிகளும் எடுக்க வேண்டாம். இன்று உழைப்பாளர்களுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
கடகம்:
உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் நாள். மனதில் குழப்பங்கள் உண்டாகும். உங்கள் திறமை உலகத்திற்கு வெளிப்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்களால் ஆதரவு உண்டாகும்.
சிம்மம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் கவனம் அவசியம்.
கன்னி:
வீட்டில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கொடுப்பார்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்:
இன்று உங்கள் கவன குறைவால் சில சங்கடம் தோன்றலாம். வேலை செய்யும் இடத்தில் உங்கள் முழு கவனத்தை செலுத்த வேண்டும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகும்.
தனுசு:
குடும்பத்தில் உண்டான குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் உண்டான சிறு சிறு பிரச்சனைகளும் நல்ல தீர்வு பெரும்.
மகரம்:
உங்கள் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். எண்ணம் நிறைவேறும்.
கும்பம்:
பிறரிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர். புதிய முதலீடு செய்பவர்கள் யோசித்து செய்வது நல்லது.
மீனம்:
நீண்ட நாட்களாக செய்து முடிக்காத வேலையை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் சில மாற்றம் கொள்வீர்கள். குடும்ப பிரச்சனை ஒன்று நல்ல தீர்வு பெரும். மன குழப்பம் அகலும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |