இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(17/04/2024)

By Sakthi Raj Apr 17, 2024 03:48 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

புதிய செயல்கள் இழுபறியாகும்.நீண்ட முயற்சிக்குப் பின் எண்ணம் நிறைவேறும் .அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை உண்டாக்கும் .உறவுகள் வழியே சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்றாலும் அதை சாதுரியமாக சமாளித்து வெற்றி கொள்வீர்கள்.

ரிஷபம்

நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள் .சகோதரர்கள் உதவியாள் உங்கள் செயல் வெற்றிகரமாகும். உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.

மிதுனம்

உங்களை விமர்சனம் செய்தவர்களும் இன்று உங்களை பாராட்டுவார்கள் மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும் வருமானம் அதிகரிக்கும் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கடகம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.எதிர்பார்த்த வருமானம் வந்தடையும். உடன் பணி புரிபவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.

சிம்மம்

அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் குறையும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். வரவேண்டிய பணம் தாமதமாகும் வாகன பயணத்தில் கவனம் தேவை.

ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை

ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை


கன்னி

பொருளாதார நெருக்கடிகள் விலகும்.பழைய கடன்களை அடைப்பீர்கள். எதிர்பார்த்து வருவாய் வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றிகரமாக அமையும்.வரவேண்டிய பணம் வசூல் ஆகும் .புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

துலாம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிகரமாக அமையும் .குடும்ப உறவுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்து வெற்றியடைவீர்கள்.உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவியாக அமைவார்கள். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்பார்ப்புகளும் விலகும். நினைத்ததை அடையும் நாள்.

விருச்சிகம்

எண்ணம் நிறைவேறும். பெரியோர்கள் ஆதரவால் ஆதாயம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாக அமையும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்து நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள்.

தனுசு

வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும். முயற்சிகள் தடைப்பட வாய்ப்புகள் உள்ளது. கடனால் மனம் சங்கடப்படக்கூடும். வேலையில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இயந்திரப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கவனம் அவசியம்.

மகரம்

வாழ்க்கை துணையால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.எண்ணம் எளிதாக நிறைவேற கூடிய நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை உருவாகும்.

கும்பம்

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிரி தொல்லை நீங்கும் .உங்களை விட்டு விலகி சென்றவர்களை உங்கள் தேடி வருவார்கள் .முயற்சிகள் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகி ஆரோக்கியமாக காண்பீர்கள்.

மீனம்

பணியிட பிரச்சனையை சரி செய்வீர்கள்.வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட சங்கடம் சரியாகும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பணியில் இருந்த சங்கடம் விலகும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உறவினர்கள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US