ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை

By Sakthi Raj Apr 16, 2024 11:30 PM GMT
Report

மஹாவிஷ்ணு பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் 7 ஆவது அவதாரமான இராமனின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு விழா ரமா நவமி ஆகும்.

இப்பொழுது ஸ்ரீ ராம நவமி நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீ ராம நவமி அன்று விரதம் எப்படி கடைபிடிக்கவேண்டும் என்ற முறை பற்றி பார்ப்போம்.

ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை | Rama Navami Viratham Hanuman Ayothi

ஸ்ரீ ராம நவமி நாளில் ராமர் படத்தை பூஜை அறையில் வைத்து பொங்கல், பருப்பு, வடை, நீர்மோர் பானகம் பாயாசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் நம் விருப்பங்கள் நிறைவேறும்.

அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம். மேலும் அன்றைய தினம் ராமாயணம் சுந்தரகாண்டம் படிப்பது நன்மையை தரும்.

ஸ்ரீ ராம நவமி அன்று ராமபிரானை வழிபடுவதால் எத்தனை துன்பத்தில் கலங்காத மனநிலையும்.

எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என்கின்றனர். அடுத்தாக ஸ்ரீ ராம நவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை | Rama Navami Viratham Hanuman Ayothi

அதாவது சித்திரை மாதம் சுக்லபட்சம் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு கர்ப்போஸ்தவம் என்று பெயர்.

சித்திரை மாத சுக்லபட்சம் திதியிலிருந்து அடுத்த திதி வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ஜன்மோதீஸவம் என்பது பெயர்.

ஸ்ரீ ராம நவமி விரதம் இருந்து ராம பிரானை வழிபட ஆஞ்சிநேயர் அருட்பார்வை கிடைக்கும். மேலும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.குடும்ப நலன் பெருகி வறுமையும் பிணியும் அகலும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை | Rama Navami Viratham Hanuman Ayothi

ஸ்ரீ ராமனைப் பற்றி எழுதும் போதும் சரி, ஸ்ரீ ராம நவமி பத்திரிக்கை அச்சடிக்கும் போதும் சரி, அவற்றின் தலைப்பில் ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடுவது உண்டு.அதாவது

“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே."

அது நீலகண்டனால் உமையமைக்கும் எடுத்துரைக்கப்பட்டதாகும்.அதை நாம் சொல்வதால் ஜெயம் மேற்படும்.மங்கலம் உண்டாகும் பிறவிப்பயனை பெறலாம்.வாழ்வில் நன்மை உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US