ஜாதகத்தில் மாந்தி ஏற்படுத்தும் பிரச்சனை.. இந்த இடங்களில் இருக்கவே கூடாதாம்

By Sakthi Raj Oct 29, 2026 04:49 AM GMT
Report

பிரபல ஜோதிடர் உமா வெங்கட் அவர்கள் ஜாதகத்தில் சனி பகவானுடைய புத்திரன் மாந்தி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் அவருடைய தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

மாந்தி என்பது பொதுவாக ஒரு மறைவு அல்லது தடைகளை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறது. இருப்பினும் அதனுடைய பலன்கள் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அதை பொறுத்து மாறுபடுகிறது. ஜாதகத்தில் 10 மற்றும் 11ஆம் வீடுகளில் மாந்தி அமர்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

அதுவே மாந்தி ஒன்றாம் வீடு என்கின்ற லக்னத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அது கர்மா மற்றும் முன்னோர்களுடைய விஷயங்களை குறிக்கிறது. மூன்றாம் வீட்டில் மாந்தி அமர்ந்த போது செய்யக்கூடிய முயற்சிகளில் ஒரு வித சோர்வு அல்லது காலதாமதம் ஏற்படலாம்.

ஜாதகத்தில் மாந்தி ஏற்படுத்தும் பிரச்சனை.. இந்த இடங்களில் இருக்கவே கூடாதாம் | Dangerous Placements Of Mandi In Astrology Palan

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் எந்த ராசிகள் நன்மையை அனுபவிக்கப் போகிறார்கள்

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் எந்த ராசிகள் நன்மையை அனுபவிக்கப் போகிறார்கள்

நான்காம் வீடுகளில் மாந்தி அமர்கின்ற பொழுது வாஸ்து குறைபாடுகள் அல்லது நிலம் தொடர்பான சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எட்டாம் வீடு என்கின்ற இடத்தில் மாந்தி அமர்ந்த போது விபத்து அல்லது அறுவை சிகிச்சை போன்ற பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.

இவர்கள் வீடுகளில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்வது மிகவும் நல்லது. பன்னிரெண்டாம் இடங்களில் மாந்தி அமர்கின்ற பொழுது வெளிநாட்டு பயணம் அல்லது சொத்துக்களை நிர்வகிப்பதில் சில பிரச்சனைகள் வரலாம்.

மேலும், ஒருவருடைய ஜாதகத்தில் மாந்தி எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் பரிகாரம் செய்வது நல்லது.

இவர்கள் திருவள்ளங்காடு மாந்தீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் ஈரோடு சங்கமேஸ்வரர் கோவில் போன்ற ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தலாம். மேலும், மாந்தி தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US