திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர மாநிலம் திருப்பதி நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும்.
இது திருமலை ஏழுமலையானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது, மேலும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
திருமலையில் உள்ள ஏழு மலைகளில், ஏழாவது மலையில் கோயில் அமைந்துள்ளதால், ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
மூலவர் ஏழுமலையானுக்கு நேற்று மாலை கைங்கர்யங்கள், நிவேதனங்கள் நிறைவடைந்த பிறகு தீபத்திருவிழா நடந்தது.
இவ்விழாவில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளிய ஏழுமலையானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோவிலுக்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு இடங்களில் நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தீபத்திருவிழாவையொட்டி கோவிலில் நேற்று சஹஸ்ர தீப அலங்கார சேவை, பௌர்ணமி கருடசேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்களிலும் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |