ஹனுமனை வெறுக்கும் ஒரு கிராம மக்கள்: ஏன் தெரியுமா?
ராமாயணத்தில் ராமனுக்கு கடைசி வரை துணையாக நின்ற அனுமன், மக்களின் மத்தியில் ஒரு கடவுளாகப் போற்றப்படுபவர்.
சிரஞ்சீவிகளில் ஒருவரான ஹனுமன் இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மறைவான இடத்தில் உயிர் வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்.
அந்தவகையில், ஹனுமனை வெறுக்கும் ஒரு கிராமமே இன்னும் இருந்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தேவகிரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்து மக்களுக்கு ஹனுமனை பிடிக்காது.
ராமாயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற ஹனுமன் சஞ்சீவினி மூலிகையை தேடிச்செல்வார்.
அப்பொழுது ஹனுமன் துரோனகிரி மலையின் மேல் சென்று மூலிகையை தேடியும் கிடைக்காததால் அந்த மலையையே தூக்கிச் செல்வார்.
துரோனகிரி மலையை கடவுளாக வழிபடும் முறை அந்த மக்களிடம் உள்ளது.
அப்படி கடவுளாக வழிபடும் மலையின் மேல்பாதியை பிரித்து எடுத்துச் சென்றதை அந்த மக்கள் பெரிய குற்றமாகப் பார்க்கின்றனர்.
கோபத்தில் இருந்த அந்த மக்கள் ஹனுமனை வெறுத்தே விட்டனர். அதனால், அந்த கிராமத்தில் ஹனுமன் சிலை, புகைப்படம் போன்றவற்றை வைக்கமாட்டார்கள்.
ஹனுமனை குறிக்கும் சிவப்பு கொடியையும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள்.
மேல் பாகம் இல்லாத தட்டையாக இருக்கும் அந்த மலையை மக்கள் இன்றும் வழிபட்டு வருகிறார்கள்.
வருடம் ஒருமுறை அவர் எடுத்துச் சென்ற தினத்தில் அந்த மக்கள் மலைக்கு புனித வழிபாடு செய்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |