வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் விலக தூபம் போடும் முறை
ஆன்மீக ரீதியாக நம் வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவது என்பது நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது, தூபம் போடுகின்ற பொழுது நம் வீடுகளில் இருக்கக்கூடிய தீய ஆற்றல்கள் மற்றும் குழப்பங்கள் பொருளாதார கஷ்டங்கள் இவைகள் எல்லாம் விலகுகிறது.
அது மட்டுமல்லாமல் நம்முடைய ஜாதக ரீதியான உள்ள தோஷங்களையும் தவிர்க்க என்ன தூபங்கள் போட்டால் நமக்கு என்ன வகையான பலன் என்று பார்ப்போம். நம் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால் கண் திருஷ்டி யாவும் விலகும்.

அதைப்போல், சாம்பிராணியில் கிராம்பை போட்டு தூபம் போடுகின்ற பொழுது வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்வினை ஆற்றல் முற்றிலும் வெளியேறுகிறது.
சாம்பிராணியில் வசம்பை போட்டு தூபம் போடுகின்ற பொழுது நம்முடைய குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

சாம்பிராணியில் தர்ப்பையை போட்டு தூபம் போடுகின்ற பொழுது துன்பங்கள் யாவும் நம்மை நெருங்குவதே இல்லை. அதை போல், சாம்பிராணியில் சிறிய அகிலைப்போட்டு தூபம் போடுகின்ற பொழுது நமக்கு கடன் தொல்லை வருவதில்லை.
சாம்பிராணியில் சிறிய சந்தனக்கட்டையை போட்டு தூபம் போடுகின்ற பொழுது வீட்டிற்கு மகாலட்சுமி வருகை தருவதோடு செல்வம் மற்றும் ஐஸ்வரியம் யாவும் பெறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |