ஜோதிடத்தில் நாட்டம் கொண்டவரா நீங்கள்

By வாலறிவன் Aug 06, 2024 08:23 AM GMT
Report

நல்ல நேரம் பர்பவர்கள், ஜோதிடத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள், நீங்கள் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அவர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள்,. ஜோதிடம் ஒரு உண்மையான அறிவியல் தான் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனால் ஜோதிடர்களில் தான் பிரச்சனை.

ஜோதிடம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் கோள்களின் உலாவல் விரைவு, நில உலகுக்கும் ஒவ்வொரு கோளுக்கும் இடையே அமையும் தொலைவு, ஒரு கோளின் ஆற்றலோடு மற்ற கோளின் ஆற்றல் கலப்புற்று பரவும் தன்மை, வானில் இயங்கும் நட்சத்திரக் கூட்டங்களின் காந்த ஆற்றலோடு கோள்களின் ஆற்றல் கலப்பதால் ஏற்படும் சூழ்நிலை மாற்றம் இவற்றின் கணித இயல்தான் வானியல் (Astronomy).

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டவரா நீங்கள் | Do You Have Trust In Horoscope

இத்தகைய கோள்களால் அமையும் வானிலை வேறுபாட்டுச் சூழ்நிலைகளால் நில உலகுக்கு வெப்ப, தட்ப ஏற்றத்தாழ்வுகள், காந்த அலை இயக்க வேறுபாடுகள் அவ்வப்போது உண்டாகும்.

இவற்றால் மனிதன் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் விளைவுகளின் கணிப்பே சோதிடம் (Astrology) ஆகும். இதை கூறியவர் வேதாத்திரி மகரிஷி - பகல் நேரத்தில் சற்று சூரியனை பாருங்கள்.

நீங்கள் இப்போது வானத்தில் பார்க்கும் சூரியன் பூமியில் இருந்து 15,17,30,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அதன் அலை நம்மை வந்தடைய 8 நிமிடம் ஆகும்.

இப்போதே அந்த சூரியன் வெடித்து சிதறினாலும் நமக்கு 8 நிமிடம் கழித்து தான் அதை பார்க்க முடியும் இதே போல் தான் ஒவ்வொரு கோள்களும் உள்ளன நீங்கள் கணக்கிடும் நேரம் இதன் அடிப்படையில் மாறுபடும் அல்லவா?

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டவரா நீங்கள் | Do You Have Trust In Horoscope

அந்த அளவு துல்லியமாக நீங்கள் நேரத்தை குறித்து வைத்திருந்தால் உங்கள் ஜாதகம் வேலை செய்யும் இல்லையேல் அது ஒரு கையேடு மட்டும் தான் கோள்களில் இருந்து அலைகள் வந்து அது நம் உடல் நலத்தில் மன நலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான்

அதை உள்வாங்கி கொள்ளும் தன்மை பொறுத்து ஒவொருவருக்கும் மாறுபடும் உங்கள் நம்பிக்கை எப்படிப்பட்ட்து?

ஏன் உங்களுக்கு அத்தனை சந்தேகம்? தவறாக போவிடுமோ என்ற எண்ணம்? புரிதளுக்காக ஒரு கதை வாழியே சிந்திப்போம் ஒரு அன்பர் கடன் வாங்கி இருந்தார்.

நல்ல உழைப்பாளி தான் இருந்தாலும் கடனை திரும்ப தர முடியவில்லை, வருத்தப்பாடுகிறார், அதிக நேரம் உழைத்து பொருள் ஈட்டுகிறார், பாதி கடனை அடைத்ததும் வட்டி அதிகம் தர வேண்டும் என கடங்காரன் மிரட்டல் வீட்டுக்கிறான்.

என்னிடம் அவ்வளவு இல்லை என்று கூறியும் கடங்காரன் விடுவதாய் தெரியவில்லை முழு கடனை அடைத்தும் கூட மேலும் பணம் கொடு என மிரட்டியவாறே இருக்க என்ன செய்வது என்று புரியாத நிலையில், கடங்காரன்  நாளைக்குள் இவ்வளவு பணம் தரவில்லை என்றால் உன்னை ஒரு வழி பண்ணிடுவேன் என மிரட்ட, அடுத்த நாள் அவன் விட்டிற்கு வருகிறான்.

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டவரா நீங்கள் | Do You Have Trust In Horoscope

கதவை திறந்ததும் உள்ளே DSP அமர்ந்து இருக்க வந்தவன் முகம் மாறியது DSP - என்னடா இந்த பக்கம் என கேட்க ஒன்னும் இல்லைங்க சும்மா தம்பிய பாக்க வந்தேன் என்று கூற இவன் என் பள்ளிக்கூட நண்பன் திடீர்னு பாக்கனும்னு தோணுச்சு வந்தன்.

உனக்கும் இவனுக்கும் என சம்மந்தம் என கேட்க கடங்காரன் வயிற்றில் புளியை கரைத்தது.. அது அது என இழுக்க இவர் எழுந்ததும்.

அவன் ஓடியே விட்டான், உனக்கு அவன் ஏதா தொல்லை கொடுத்தா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் என அதிகாரி நம் அன்பரிடம் கேட்க இனி கட்டாயம் சொல்றேன் என கூறி நன்றி தெரிவித்தார்.

உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


அதன் பின் கடங்காரன் வரவே இல்லை இப்போ நிஜத்திற்கு வருவோம் சனி கிரகத்தால் பாதிப்பு, எனக்கு செவ்வாய் தோஷம், சந்திரன் நிச்சமாய் உள்ளது, ராகு திசை அதனால் எனக்கு நேரம் சரி இல்லை

இப்படியெல்லாம் புலம்புவதை நிறுத்தி இந்த கோள்களுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் இறை சக்தியை கொஞ்சம் நினைத்து பாருங்கள்

அதன் மேல் உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால் இந்த கோள்களின் தாக்கம் கொஞ்சம் கூட பாதிப்பை ஏற்படுத்தாது இது புரிந்ததால் தான் நாளும் கிழமையும் நளிந்தோர்க்கு இல்லை நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாதன் என் உள் இருக்கையிலே - என்ற தத்துவங்கள் பிறந்தது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என தோன்றினால் அந்த காரியம் செய்வதால் வரும் விளைவை கணித்து செயலாற்றுங்கள்.

நல்ல செயல்கள் செய்ய நேரம் காலம் பார்க்காதீர்கள் படையப்பா ரஜினி போல போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என சொல்லிட்டு போயிட்டே இருக்கனும் உங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அல்லது உங்களை படைத்தவன் மீதான நம்பிக்கை உண்மையாக இருக்குமானால் இந்த ஜோதிட ஜாதக கட்டங்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முடியாது

வாழ்க வளமுடன் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US