மாடி வீட்டில் இருப்பவர்கள் கோலமிடுவது அவசியமா?
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் வீட்டு வாசலில் கோலமிடுவது என்பது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது.காரணம் தினமும் காலையில் வாசல் தெளித்து கோலம் போட அவை நம் வீட்டிற்கு லட்சுமி கடாக்ஷம் உண்டாக்கும்.
பொதுவாக,வீடு என்பது நேர்மறை ஆற்றல் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும்.அப்பொழுது தான் குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாகவும்,பொருளாதாரத்தில் எந்த ஒரு தடங்கல் இல்லாமலும் இருக்கமுடியும்.
அப்படியாக பலருக்கும் ஒரு வித சந்தேகம் இருக்கும்.தாங்கள் மாடி வீட்டில் வசித்து வருகின்றோம்.நாங்கள் கட்டாயம் வாசலில் கோலம் போட வேண்டுமா என்று?அதை பற்றி பார்ப்போம்.
நம் வீட்டிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகம் சுழிக்காமல் சந்தோஷமாக நம் வீட்டிற்குள் வருகை தர வேண்டும்.அதற்கு வீட்டு வாசலில் கோலம் போட அந்த கோலம் அவர்களுக்கு முக மலர்ச்சியை கொடுக்கும்.
மேலும்,எத்தனை மாடி கொண்ட வீட்டில் வசித்தாலும் வீடுகளில் நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது கட்டாயமாக வைத்திருப்போம்.ஆக முடிந்த அளவு சிறிய கோலமாவது வாசலில் போடுவது நமக்கு நற்பலன்களை தரும்.
ஆக முடிந்த அளவு அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தாலும் உங்கள் வாசலுக்கு ஏற்ப ஒரு சிறிய கோலம் போடுங்கள்.அது உங்களுக்கும் ஒரு வகை புத்துணர்ச்சியை கொடுக்கும்.அதோடு நம் குடும்பத்திற்கு மஹலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |