கர்மா என்பது உண்மையில் இருக்கிறதா?
இந்த உலகம் மிக பெரியது என்றாலும், செய்யும் தவறுகளில் இருந்து நாம் கட்டாயம் தப்பிக்க முடியாது என்பது தான் உண்மை. அதனை தான் கர்மா என்றும் சொல்வார்கள். இந்த கர்மா ஒரு மனிதனை எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
அதாவது அவன் நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி அவனை கர்மா பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கர்மாவில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
காரணம், இந்த பூமி ஒரு மனிதனின் கணக்குகளை சரியாக கணக்கிட்டு நன்மை தீமையை அவனுக்கே திரும்ப கொடுக்கக்கூடிய தன்மை கொண்டது. அதே போல் வெளியே நல்ல மனிதன் போல் வேஷம் போட்டுகொண்டு மனதிற்குள் கெட்ட எண்ணங்கள் வைத்திருப்பவர்கள் அதிகம்.
அவ்வாறு மனதில் கெட்ட எண்ணம் கொண்டு ஒரு நல்ல செயலை செய்தாலும் அவர்கள் நல்ல செயலை செய்த முழு பலனை பெற முடியாது. அப்படியாக, இந்த கர்மா ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது.
அந்த கர்மா மனிதனுக்கு எந்த அளவிற்கு தாக்கத்தை கொடுக்கிறது என்று நம்மோடு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |