ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நாக தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா?

By Sakthi Raj May 10, 2026 08:54 AM GMT
Report

  ஜோதிடத்தில் கடுமையான தோஷங்களில் இந்த செவ்வாய் மற்றும் நாக தோஷம் காணப்படுகிறது. அதாவது இந்த தோஷம் இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் நிறைய தடைகளை தாண்டி அவர்களுக்கு வெற்றி என்கின்ற ஒரு அமைப்பை கொடுக்கிறது. அதுவும் குறிப்பாக திருமணத்தில் இவர்கள் அவ்வளவு எளிதாக ஒரு மகிழ்ச்சியான சூழலை அனுபவிக்க முடியாது.

அப்படியாக, ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் நாக தோஷம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு இந்த மாதிரியான பாதிப்புகள் கொடுக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்

2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்

செவ்வாய் தோஷம்:

ஒருவர் லக்னத்திற்கு  2, 4, 7, 8, 12 என்ற இடத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகத்தை நாம் செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகம் என்று குறிப்பிடப்படுவ துண்டு. ஆனால் இதற்கு சில விதிவிலக்குகளையும் நம் பார்க்கலாம். செவ்வாயுடன் சனி பகவான் இணைந்திருந்தால் இந்த தோஷம் குறைந்து அதனுடைய தாக்கமும் குறைந்து காணப்படும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நாக தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா? | Does Sevvai Naga Dosha Delay Marriages

மேலும் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கின்ற பொழுது அதே அமைப்பு கொண்ட ஜாதகரை திருமணம் செய்து வைக்கும் பொழுது அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது. அதுமட்டுமல்லாமல் செவ்வாய் எட்டில் இருந்தால் மாங்கல்ய பலம் குறைந்தும் ஏழில் இருந்தால் அது வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகளையும் கொடுக்கூடும்.

ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்காக குரு பார்வை இருந்தாலும் அல்லது செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தியாகும்.

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

நாக தோஷம்:

ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஒன்று இரண்டு ஏழு எட்டு ஆக இடங்களில் அமரும்போது இதனை நாக தோஷம் என்று சொல்கிறார்கள். நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் முக்கிய பங்கு கொள்கிறார்கள். அதாவது ராகு பகவான் பிரம்மாண்டத்தை குறிக்கக்கூடியவராகவும், கேது அவர்களுக்கு தன்மையையும் ஞானத்தையும் குறிக்க கூடியதாகவும் இருக்கிறார்கள்.

ஆக இவர்கள் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமையும் பொழுது திருமண வாழ்க்கையில் குழப்பங்களும் அதற்கான தடையுமே வருகிறது. பொதுவாக இவர்களுக்கு 33 வயது வரை நிறைய பிரச்சனையை சந்திக்கக்கூடிய நிலைதான் கொடுக்கிறது.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நாக தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா? | Does Sevvai Naga Dosha Delay Marriages

பரிகாரம்:

ஒருவருக்கு திருமணம் தொடர்பான தோஷங்கள் இருக்கிறது என்றால் அந்த ஜாதகத்தை முதலில் நாம் நல்ல முறையில் ஆலோசனை செய்வது அவசியம். காரணம் பல நேரங்களில் பல இடத்தில் அந்த தோஷம் தானாகவே சில சுபத்துவமான கிரகங்களின் பார்வையால் அவை நிவர்த்தி ஆகி விடுகிறது.

ஆக உண்மையில் தோஷம் இருக்கிறதா என்று ஆராய்ந்த பிறகு நாம் அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செவ்வாய் மற்றும் நாக தோஷம் உடையவர்கள் குலதெய்வ வழிபாடுகள் செய்யும் பொழுது திருநாகேஸ்வரம் காலகஸ்தி வைத்தீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்வது என்பது இவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

மேலும், தோஷம் என்கின்ற அமைப்பினால் காலதாமதம் என்று எடுத்துக் கொள்வதை தாண்டிலும் அந்த காலதாமதத்தில் நம் சுயமாக நம்மை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதை கருத்தில் கொண்டு அதனை பயன்படுத்துவது நமக்கு நன்மை அளிக்கும். சிலருக்கு நல்ல தெளிவான சிந்தனையும் தெளிவான மனநிலை கிடைத்த பிறகு நிறைய பொக்கிஷமான வாய்ப்புகள் கைகளுக்கு வருவதை நாம் பார்க்க முடிகிறது.

ஆக கால தாமதம் என்பது சமயங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுப்பதாகவும் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கு நாம் அஞ்சாமல் அதை சரியான முறையில் அணுகி வாழ்வது அவசியம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US